Pages

Wednesday, February 13, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.19

திருக்குறள்


அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள்:160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.

விளக்கம்:

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

பழமொழி

Nothing can bring you peace but yourself

மனங்கொண்டது மாளிகை.

இரண்டொழுக்க பண்புகள்

1.தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

   - ஔவையார்

  பொது அறிவு

1. சர்வதேச தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 20

2. தேசிய பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 மார்ச் 3

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கோதுமை



1. வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

2. சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.

3. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறைகிறது. கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம்.

English words and Meaning

Zeal. ஆர்வம்,உற்சாகம்
Zone.   மண்டலம்
Zephyr.  இளங்காற்று
Zest.   நற்சுவை
Zoologist.  விலங்கியல் நிபுணர்

அறிவியல் விந்தைகள்

சாயம்
சாயம் (dye) என்பது பொதுவாக ஒரு நிறமேற்றப்பட்ட பொருளாக அறியப்படுகிறது, இது எந்த பொருளோடு பயன்படுத்தப்படுகிறதோ அதனோடு ஒன்றுகலந்துவிடும் இயல்பைக் கொண்டிருக்கின்றது.
* பொதுவாக சாயம் ஓர் நீர்ம கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது
*சாயம் ஏற்றப்பட்ட சணல் இழைகள் வரலாற்றுக்கு முந்தைய குகையில் 36,000 காலத்தில் ஜார்ஜிய குடியரசில் கண்டு பிடிக்கப்பட்டன.
* குறிப்பாக இந்தியா மற்றும் போனீசியாவில், சாயம் ஏற்றுவது பரவலாக 5000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாக, தொல்பொருள்துறை சான்றுகள் காட்டுகின்றன.

Some important  abbreviations for students

* DIG   - Deputy Inspector General

* D.Lit  -   Doctor of Literature

நீதிக்கதை

ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள்.

தன் முட்டையைக்கூட அடைகாத்துக் குஞ்சுப் பொரிக்காமல், காகத்தின் கூட்டில் இடும் சோம்பேறி’’ ,  என்றார்கள்.

அதைக் கேட்ட குயில், ‘நான் சோம்பேறி பறவைதானா?’ என்று வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியது.

அந்த மரத்தில் வந்துமர்ந்து ஆலம்பழத்தைக் கொறித்த கிளி, “தத்தை மொழி பேசும் கிள்ளை என என்னைப் புகழ்வார்கள்” என்றது.

கோயில் மண்டபத்தில் வசித்து புறா, “கொஞ்சும் புறா, சமாதானத் தூதுவன் எனப் பெருமையாப் பேசுவாங்க” என்றது.

குயில் அடுத்ததாக மொட்டைப் பாறை மீது நின்றிருந்த மயிலிடம் சென்றது. “நான் தோகை விரித்தாடினால் காணக் கண்கோடி வேண்டும்னு பாராட்டுவாங்க!” என்றது.

அடுத்ததாகச் சிட்டுக்குருவி,“என்னைப் பார்த்துத்தான் சுறுசுறுப்பைக் கத்துக்கணும்னு மனுஷங்க பேசிப்பாங்க!” என்றது.

இப்படிக் குயில் சந்தித்த பறவைகள் அனைத்தும் தங்களைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதாகத் தெரிவித்தன.

‘மற்ற பறவைகளைத் திறமைகளுடன் படைத்த கடவுள், என்னை விட்டுவிட்டாரே?’ எனக் கண்ணீருடன் ஆற்றங்கரையோரம் அமர்ந்தது.

சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சலசலப்பு போன்று குயிலின் மனமும் அமைதியற்று இருந்தது. அந்த ஆற்றில் வசித்த தேவதை, குயிலின் அழுகையைக் கேட்டு மேலே வந்தது.

குயிலைத் தனது மடியில் வைத்து வாஞ்சையுடன் வருடியபடி, “உனக்கு என்ன பிரச்னை?” எனக் கேட்டது.

குயில் தனது வருத்தத்தைச் சொன்னதும், தேவதை கலகலவென்று சிரித்தது.

“இதுக்கா வருத்தப்படறே? உன் பலம் உனக்குத் தெரியலை!” என்றபடி தொடர்ந்தது.

“காலநிலை நான்கு வகைப்படும். கார்காலம், கூதிர்காலம், கோடைக்காலம், குளிர்காலம். அதில், குளிர்காலத்தை முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என இரண்டாகப் பிரிப்பாங்க. கோடைக்காலத்தை இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்னு இரண்டாகப் பிரிப்பாங்க.

இதில், இளவேனிற் காலம்தான், வசந்த காலம். பின்பனிக் காலத்தில் இலைகளை உதிர்த்த மரங்கள், வசந்த காலத்தில்தான் திரும்பவும் துளிர்க்கும்; பூக்கள் பூக்கும். மனத்தை வருடும் தென்றல் காற்று வீசும். இதமான வெயிலும் இருக்கும். அப்படிப்பட்ட வசந்த காலம் வந்துவிட்டதை, முதன்முதலா இனிமையாகக் கூவி எல்லாருக்கும் தெரிவிப்பதே நீதான். பிறகுதான் மற்ற பறவைகள், மழைக்காலத்துக்குத் தேவையான உணவைச் சேகரிக்கின்றன” என்றது தேவதை.

தேவதைச் சொன்னதை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது குயில்.

“புறா குணுகுவதும், மயில் அகவுவதும் இனிமையா இருப்பதில்லை. அதைத் தங்களின் பலவீனமாகவும் நினைப்பதில்லை. அதுமாதிரி நீ காகத்தின் கூட்டில் முட்டை இடுவது உன் வாழ்க்கை முறை. அதைப் பலவீனமா நினைக்காமல், உன் பலம் மட்டுமே மனசுக்குள் இருக்கட்டும்’’ என்றது தேவதை.

உற்சாகம் பெற்ற குயில், தேவதையை வணங்கிவிட்டுப் பறந்தது. மறுநாள் அதிகாலையில் விழித்துக்கொண்டது. குளிர்ச்சியானத் தென்றல், உடலைத் தழுவுவதை உணர்ந்தது.

எட்டத்தில் நின்றிருந்த வேம்பு, நேற்றுவரை மொட்டையாக இருந்தது. இன்றோ, இளம்பச்சை நிறத்தில் இலைகள் துளிர்த்திருந்தன. வெள்ளை நிறப் பூக்கள் அரும்பியிருந்தன. வசந்த காலம் வந்துவிட்டதைக் குயில் உணர்ந்துகொண்டது.

‘நான் கவிக்குயில். வசந்த காலப் பறவை. அனைவருக்கும் வசந்தம் வந்துவிட்டதை அறிவிக்க வேண்டும்’ என்ற முனைப்புடன், ‘அக்காவ்... அக்காவ்!’ என ராகமிட்டுப் பாட ஆரம்பித்தது.

இன்றைய செய்திகள்
14.02.2019

* ரூ.325 கோடியில் ‘ஹைடெக்’ அறுவைசிகிச்சை அரங்கம் அமைக்க மதுரை அரசு மருத்துவமனையில் பாரம்பரிய கட்டிடத்தை இடிக்க முடிவு.

* வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மற்றும் புவி தகவலியல் துறையின் மூலம், ரேடார் செயற்கைகோள், ஆளில்லா விமானம், மொபைல் அப்ளிகேஷன் என நவீனத் தொழில்நுட்பங்களால் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன. துணைவேந்தர் குமார் பெருமிதம்.

* நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

* வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

* ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, தமிழக வீரர் முகுந்த் சசிகுமார் தகுதி பெற்றார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌻The decision to demolish the traditional building at the Madurai Government Hospital was to set up  'Hitec' Cesarean Theatre at Rs 325 crore.

🌻Through the Department of Remediation and Earth Informatics of Agricultural University, radar satellite, drones and mobile applications are provided by various technologies to agriculture and farmers through modern technologies said Vice-Chancellor Kumar proudly

🌻 A bill had passed in the Tamilnadu legislative assembly to  raise Nagerkovil and Hosur as corporation

🌻First ODI against Bangladesh: New Zealand won by 8 wickets.

🌻 At the  ATP Challenger tennis tournament, Chennai Open men's singles semifinals, Tamil Nadu player Mukund Sasikumar has qualified.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment