Pages

Tuesday, February 12, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.02.19

பிப்ரவரி 13


உலக ரேடியோ தினம்.
யுனெஸ்கோவால் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி உலக ரேடியோ தினமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு மையபொருளை கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது... 2019 ஆம் ஆண்டின் மையபொருள்
Dialogue, Tolerance and Peace

திருக்குறள்

அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள்:159

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

விளக்கம்:

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர்கள் இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

பழமொழி

No man can serve two Masters

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதே

இரண்டொழுக்க பண்புகள்

1. தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

இறுதியில் இலட்சியத்தை அடைவிக்கும் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஓர் இலட்சியமாயிருத்தல் வேண்டும்.

       - கதே

பொது அறிவு

1.தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

  அஞ்சலை அம்மாள்

2. தமிழ் நாடகத்தின் தந்தை என  அழைக்கப்படுபவர் யார்?

 பம்மல் சம்பந்த முதலியார்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கிச்சிலி பழம்



1. கிச்சிலியானது நீள் கோளவடிவில் பசுமையான இலைகள் தூய்மையான வெண்மை நிற பூக்கள் கொண்ட சிறுமரமாகும். பார்ப்பதற்கு எலுமிச்சை செடி போன்று காணப்படும். இதன் பழங்கள் நெல்லிக்காய் அளவுதான் இருக்கும். இதில் நாரத்தை, துருஞ்சிநாரத்தை, கடாரநாரத்தை, பப்பளிமாசு, கமலா, சாத்தக்குடி என பல பிரிவுகள் உண்டு.

2. நன்கு பழுத்த பழத்தை விருப்பமுடன் சாப்பிட பித்தத்தினால் உண்டான அனைத்து நோய்களும் போகும். இதன் பிஞ்சை ஊறுகாய் செய்து சாப்பிட வாந்தி, சுவையறியாமை நீங்கும். உணவில் விருப்பத்தை உண்டாக்கும். வாய்க்குமட்டல் உள்ளவர்கள் இனிப்பு கிச்சிலிபழத்தை வாயிலிட்டு மென்று சாற்றை மெதுவாக விழுங்கினால் வாய்க்குமட்டல் நீங்கும்.

3. நல்ல ஜீரணசக்தியை கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும் பணியைச் செய்கிறது. பித்தத்தை போக்க வல்லது.

English words and Meaning

Xyst உடற்பயிற்சி கூடம்
Yearn.    ஆர்வம் ,ஏங்குதல்
Yell. கூக்குரல்,கூவுதல்
Yet.  இதுவரையிலும்
Yield.  விளைச்சல், விட்டுக்கொடுத்தல்

அறிவியல் விந்தைகள்

சோற்றுக்கற்றாழை
* இலங்கை வழக்கு: பிள்ளைக் கற்றாழை
 * இது  சதைப்பற்றான ஒரு தாவர வகையாகும். முதல் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
*உடல் எடை குறைப்பிற்கும் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. * இந்தச் செடியின் சாற்றை வைத்து முக அழகிற்காகவும் உடல் சூட்டைத்தணிக்கவும் மருத்துவ உலகம் பயன்படுத்தியுள்ளது.

Some important  abbreviations for students

DFDR -   Digital Flight Data Recorder

DM - District Magistrate

நீதிக்கதை

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்
13.02.2019

* பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது திருச்சி விமான நிலையம்.

* ககன்யான்' திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

* உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்பட்டது. தனிநீதிபதி விதித்திருந்த தடையை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவை அடுத்து 632 பேரின் நியமனத்துக்கு தடை நீங்கியது.

* பூடான் நாட்டில்  நடைபெற்ற தெற்காசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜனகன் தங்கம் வென்றார்.

* இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், தேசிய அளவில் சாதித்துள்ளனர் நீலகிரி வீரர்கள்.  தேசிய சப்-ஜூனியர் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, மாவட்டத்துக்கே பெருமை தேடித் தந்துள்ளனர் ஹாக்கி வீரர்கள்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌻Tiruchirapalli Airport is the second largest national park in terms of service.

🌻ISRO chief K. Sivan said 10 soldiers from the Air Force would be selected to send to space by Gaganyan plan.

🌻 A ban on special physical education teacher  appointment hiring has been canceled. The Supreme Court  two division judge has ordered to cancel the ban. After this ban the appointment of 632 people 's p ban has gone

🌻Janakan  of Pudukottai, who played for India in the South Asian-level Ball badminton competition in Bhutan won  the gold

🌻 Nilgiris players have achieved national level in the national game hockey of India. Hockey players have been ranked second in the National Sub-Junior Competition and have been make the district to be proud.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment