சாவித்திரிபாய் புலே |
அதிகாரம்:மருந்து
குறள் எண்:943
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.
பொருள்:முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
Beauty is a short-lived reign.
அழகின் ஆட்சி அற்ப காலமே.
இரண்டொழுக்க பண்புகள் :
*புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.
*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.
பொன்மொழி :
சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் --பெர்னாட்ஷா
பொது அறிவு :
1. கடலில் கலக்காத பெரிய நதி எது?
விடை : யமுனை.
2. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?
விடை : அன்னை தெரசா
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. கடலில் காணப்படும் நீர். 3% மட்டுமே புதுப்புனலாக அதாவது நல்ல நீராக இருக்கும்
ஜனவரி 03
நீதிக்கதை
இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு.
ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவது போல் இருந்தது. சுற்றி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்தது அந்த இடம்.
ரொம்ப தூரம் நடந்ததற்கு பின் அவர் ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ளே நுழைந்தார். அங்கு நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும் இருந்தன . அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது. அவருக்கு கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது. அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.
அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூசணி கொடியை பார்த்தார் . அதில் மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் , “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சிறியதாக இருக்கிறது.ஆனால் காயோ ரொம்ப பெரியதாக இருக்கிறது . ஆரஞ்சு பழமோ சிறியதாக இருக்கிறது.ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது.இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடாக இருக்கிறது .
இந்த இயற்கையைப் படைத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கும்"
என்று யோசித்தார்
அவ்வாறு சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து ரொம்பவே தூக்கம் வருவதுபோல் இருக்க மரத்துக்கு அடியில் தலைசாய்த்து அசந்து தூங்கி விட்டார்
திடீரென்று அவர் தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில் கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று.
அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்”
என்று பயந்தார் . அவர் மனதில் "பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரைதான்" என்று அப்போது நினைத்தார்.
இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment