Pages

Thursday, October 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.10.24

   

சார்லஸ் பாபேஜ்

   




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
 கேளாது நட்டார் செயின்.

பொருள்:உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

பழமொழி :

A good beginning is half the battle.

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம்  திட்டமிட்டப்படி  செயல்படுத்தவும் தொடங்கினால்  நீங்கள்  நிச்சயம்  வெற்றியாளார் தான்.----ஆப்ரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு எது? 
 
விடை: இதயம்

2.  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு?
 
விடை:  1870

English words & meanings :

 Stove-அடுப்பு,Strainer-வடிகட்டி

வேளாண்மையும் வாழ்வும் : 

"டிசம்பர் 23,

இந்திய விவசாயிகள் தினம்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது"

அக்டோபர் 18

சார்ல்ஸ் பாபேஜ்  அவர்களின் நினைவுநாள்

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbageடிசம்பர் 261791 - அக்டோபர் 181871பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.


தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்





தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 111847 – அக்டோபர் 181931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நீதிக்கதை

 ஊக்கமது கைவிடேல்


மருங்கூர் என்னும் ஊரில் மாதவன் என்ற  மரம் ஏறும் தொழிலாளி வாழ்ந்து வந்தார்.

சுற்றுவட்டார கிராமங்களில் தென்னந்தோப்பில் தேங்காய்களை பறித்துக் கொடுத்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை ஏழ்மையில்லாதவாறு நடத்தி வந்தார் மாதவன்.

ஒரு சமயம் தேங்காய்களை அறுக்கின்ற காலத்தில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. தென்னந்தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனை வரும்படி அழைத்து, தேங்காய்கள் அறுப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.

மாதவனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் மகேந்திரன் படிப்பிலும், பேச்சு சாதுர்யத்திலும் படு சுட்டியாக இருந்தான் .

சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் நிறைய காணப்பட்டன. மகேந்திரனால் தன் தந்தைப்படுகின்ற வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதே நேரம் தேங்காய்களைப் பறிப்பதற்காக, தன் தந்தை ஒத்துக்கொண்ட வேலையையும் செய்ய முடியாமல், மனக்கஷ்டப் படுவதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான்.

தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்கள். ஆனால் மாதவனின் மகன் மகேந்திரன் வருவது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

தோப்புக்காரர்களை நெருங்கிய மகேந்திரன் “ஐயா! எல்லோரும் மன்னிக்க வேண்டும். இன்று என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் குறிப்பிட்ட நாளில் தேங்காய் அறுப்பதற்கு வர முடியவில்லை.

அதனால் அவர் செய்கின்ற வேலையை நானே செய்வதாக முடிவெடுத்து வந்துள்ளேன்” என்றான். அதனைக் கேட்ட தோப்புக்காரர்கள் ஆச்சர்ய மடைந்தனர்.

“சிறுவனே! உன்னால் எப்படி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறிக்க முடியும்? என்று கேட்டனர்.

உடனே மகேந்திரன் “ஐயா! நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், என் தந்தையின் உடல்நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவரிடம் செல்லவே பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அதனால் நான் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துத் தருகிறேன்” என்று கூறியபடி  கொண்டு வந்த வெட்டரிவாளினை இடையில் சொருகிக் கொண்டு வேகமாகத் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினான் மகேந்திரன்.

சிறுவயதிலேயே மரம் ஏறுவதில் தன் தந்தையுடன் பயிற்சி செய்தது சரியான நேரத்தில் உதவி செய்கிறதே! என்று மனதுள் நினைத்தபடியே மர உச்சிக்கு சென்று விட்டான் மகேந்திரன்.

தோப்புக்காரர்கள் எல்லோரும் மகேந்திரனை வியப்புடன் பார்த்து அவனின் வீரத்தைப் பாராட்டினார்கள். மகேந்திரன் தன் கடமையையே கருத்தில் கொண்டவனாக அரிவாளினால் தேங்காய்களை அறுக்கத் தொடங்கினான்.

பின்னர் மரத்தைவிட்டு கீழிறங்கி அடுத்த மரத்தில் ஏறத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே, நன்கு விளைந்த தேங்காய்களை எல்லாம் இனம் கண்டுபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுத்து முடித்து விட்டான்.

அந்த தோப்புக்காரரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகிலிருக்கும் மற்றொரு தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய்களை அறுக்கலானான் தனது தந்தையார் ஒத்துக்கொண்ட எல்லாத் தோப்புக்காரர்களின் தோப்புகளிலும் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துக் கொடுத்து பணத்தை  வாங்கிக் கொண்டு வீட்டையடைந்தான் மகேந்திரன்.

தான் வாங்கி வந்த பணத்தையெல்லாம் தந்தையிடம் கொடுத்து, தான் செய்து வந்த வேலைகளைப் பற்றிக் கூறினான் . மாதவன் அதனைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.

பயமில்லாமல் உயரமான மரங்களில் ஏறி எப்படி நீ தேங்காய்களை அறுத்தாய்? என்று மகேந்திரனிடம் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

அதற்கு மகேந்திரன் “அப்பா! தன்னம்பிக்கையும் , உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்ற மனத்துணிவும் தான் இக்காரியத்தில் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது.

இனிமேல் நீங்கள் கவலையுடன் நோயினால் படுத்திருக்க வேண்டாம். இப்போதே வைத்தியர் 

வீட்டிற்குச் செல்லலாம்," என்று கூறினான்.

மாதவனோ தன் மகனை அன்போடு தழுவிக் கொண்டார்.

நீதி:மன உறுதியை இழந்து விடாமல் துணிவோடு செயல்களை செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

18.10.2024

* தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு.

* தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.

* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

* 12 அணிகள் பங்கேற்கும் 'புரோ கபடி லீக்' நாளை தொடக்கம்.

* டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Heavy rain across Tamil Nadu filled 891 ponds: 90 dams and reservoirs have 60 per cent capacity of water. 

*  Over 200 snakes were caught by the fire department and snake catchers, in the rain that fell across Tamil Nadu yesterday.

* The time limit for booking train tickets will be reduced from 120 days to 60 days.  Indian Railways has said that this will come into effect from November 1.

* 'Pro Kabaddi League' will start tomorrow with 12 teams in participation.

* Test Cricket Rankings;  Harry Brooke advances to 2nd place.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, October 16, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.24

  

உலக வறுமை ஒழிப்பு நாள்

   




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?

பொருள்:பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

பழமொழி :

A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. Vermiculture என்பது

விடை:  மண்புழு வளர்த்தல்

2. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி

விடை:  வெர்னியர்

English words & meanings :

 Pot-பானை,

Spoon-கரண்டி

வேளாண்மையும் வாழ்வும் : 

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.

இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

அக்டோபர் 17

உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

நீதிக்கதை


 அறிவில் சிறந்தவர் யார் ? 

விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள். 

 ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை அரச சபையில் பரீட்சித்துப் பார்ப்போம் வெல்பவருக்கே பிரதம மந்திரி பதவி” என்றார்.

மறுநாள் அரசவையில் ராயரும் மகாராணியும் கொலு வீற்றிருக்கும் போது இராயர் சபையோரை பார்த்து “நான் நேற்றிரவு அந்தப்புரத்தின் நிலா மாடத்தில் இருக்கும்போது ஒருவன் எனது மார்பில் காலால் எட்டி உதைத்து எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்யலாம் ?” எனக் கேட்டார். 

உடனே மகாராணியால் சிபாரிசு செய்யப்பட்ட சாஸ்திர பண்டிதர் எழுந்து “உலகத்தில் ராஜாதிராஜனாக விளங்கும் தங்களை அலட்சியம் செய்து தங்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அவன் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், தங்கள் மார்பில் எட்டி உதைத்த அவன் கால்களையும் வெட்டி எறிய வேண்டும் !” என்றார். 

இராயர் அப்பாஜியை பார்த்து நீ என்ன சொல்கிறாய் என்றார். அதற்கு அப்பாஜி “உங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொற்சலங்கையும், தண்டை கொலுசும் போட்டு உங்கள் முகத்தில் எச்சில் உமிழ்ந்த வாயை முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும். ஏனெனில் தங்களுடைய அந்தப்புரத்தின் நிலா மாடத்துக்கு வந்து தங்கள் வீர மார்பில் எட்டி உதைத்துத் தங்கள் திருமுகத்தில் எச்சிலை உமிழக் கூடியவன் தங்களுடைய பச்சிளம் பாலகனான இளவரசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?” என்றார். 

ராயர் மனம் மகிழ்ந்து “அப்பாஜி நீ சொல்வது சரிதான்” என்றார். 

பின்பு இராணியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா ? யார் அறிவில் வல்லவர் என்பதை ?” எனக் கேட்பவர் போல் பார்த்தார். 

நீதி:  எப்போதும் சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

17.10.2024

* பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்று தருவதாகக் கூறி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* 45% பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

* இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்.

* உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல். அர்ஜென்டினா வெற்றி.

* இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Today's Headlines

* The school education department has warned to be careful with gangs that extort money from parents by claiming to give incentives to school students.

 * Cyclone No. 1 has been activated in Pampan due to the presence of a low pressure zone in the Bay of Bengal.

 * People with 45% speech and language impairment can also study MBBS: Supreme Court judgement.

 * 3% hike in dearness allowance for central government employees.  The approval was given in the Union Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi.

* Pakistan has no right to interfere in India's internal affairs: Indian Ambassador to UN

 * World Cup Soccer Qualifiers: Messi Scores Hat-trick  goal .Argentina wins.

* The first day of the first Test match between India and New Zealand has been cancelled.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 15, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.24

 

உலக உணவு நாள்

   




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

 அதிகாரம்:பழைமை 

குறள் எண்:802

 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
 உப்புஆதல் சான்றோர் கடன்.

பொருள்:நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

பழமொழி :

Anger is sworn enemy .

 தீராக் கோபம் போராய் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!  இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!-----விவேகானந்தர்

பொது அறிவு : 

1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?    

விடை :  உருளைக்கிழங்கு.    

2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?   

விடை :  ரோமானியர்கள்

English words & meanings :

 Knife-கத்தி,

Plate-தட்டு

வேளாண்மையும் வாழ்வும் : 

ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை  வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.

அக்டோபர் 16

உலக உணவு நாள் (World Food Day)

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

நீதிக்கதை

 யார் சிறந்தவன்? 

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.

அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார். 

ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார். 

மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர். 

கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.

 ஒரு காதில் வாங்கி தன் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !”  அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார். 

அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.

நீதி: அறிவுகூர்மையுடன் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

இன்றைய செய்திகள்

16.10.2024

* தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு.

* திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

* பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

* டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது.

* 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

* North East Monsoon has started: Heavy rain is expected in 12 districts of Tamil Nadu tomorrow.

 * Heavy rains in Tiruvallur: Increase in water supply to 5 lakes supplying drinking water to Chennai.

* Within 24 hours, 1.55 lakh people have applied for internships in reputed companies with financial assistance under the Prime Minister's Internship Scheme.

 * The Denmark Open International Badminton Tournament started yesterday in Odense.

 * Tamil Nadu team won the champion title in the men's category of the 31st Men's National Adya Padya Tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்