Pages

Thursday, December 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2024

 

நுரையீரல்

  






திருக்குறள்: 

"பால் : பொருட்பால்

 அதிகாரம்: சூது

 குறள் எண்:939

 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.

பொருள் :
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்."

பழமொழி :

Early sow, early now.

பருவத்தே பயிர் செய்

இரண்டொழுக்க பண்புகள் :  

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

பொன்மொழி :

கடப்பதற்கு தடைகளும்,  தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகி விடும் --ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. மனித உடலில் எடை குறைவான உடல் உறுப்பு எது? 

விடை : நுரையீரல்.              

2. மனித உடலில் மிக அதிகமாக அடங்கியுள்ள உலோகம் எது? 

விடை: கால்சியம்

English words & meanings :

 Meditation      -      தியானம்

Painting.    -     வண்ணம் தீட்டுதல்

நீதிக்கதை

 எறும்புகளின் ஒற்றுமை 


அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மரத்தின் ஓட்டைக்குள்ளே பாம்பு ஒன்று வசித்து வந்தது. அந்த பாம்பு தவளைகளையும், வாத்து, பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடும். 


பகல் முழுக்க தூங்கி இரவில் சரியான நேரத்தில் வேட்டையாடும்.சில நாட்களுக்கு அப்புறம் பாம்பு பெருதாக வளர்ந்தது.அதனால அந்த மரத்தின் ஓட்டைக்குள்  போக முடியவில்லை.


அதனால ஒரு புது வீட்டுக்கு மாற யோசித்தது. புது வீடு தேடும்பொழுது ஆலமரத்தில் ஒரு பெரிய ஓட்டை இருப்பதை பார்த்தது.


ஆனால் அந்த மரத்துக்கு கீழே எறும்பு புற்று ஒன்று இருந்தது. பாம்பு அந்த ஆலமரத்துக்கு பக்கத்தில் வந்து “இனிமேல் நான் இந்த மரத்தில்தான் இருப்பேன். நீங்க எல்லோரும் உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்கள் ” என்று சொன்னது. 


அங்கு இருந்த எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப பயந்து போய்விட்டன. ஆனால் எறும்புகள் மட்டும் பயப்படவில்லை. அது அந்த எறும்புகளின் ஒற்றுமையால்  கட்டப்பட்ட புற்று. 


அதனால் எல்லா எறும்புகளும் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் முன்னேறி பாம்பை சுற்றி நின்று  தாக்க 

ஆரம்பித்தார்கள். எறும்பு கடியால் எற்பட்ட தாங்க முடியாத வலியால் பாம்பு அந்த இடத்தை விட்டு ஓடிப் போனது. 


பிறகு,அந்த இடத்துக்கு வரவே இல்லை. அன்றிலிருந்து எல்லா மிருகங்களும், பறவைகளும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள். 


நீதி: ஒற்றுமையே பலம். 

இன்றைய செய்திகள்

20.12.2024

* வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன் தகவல்.

* புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.

* சர்வதேச தரவரிசை பட்டியல்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

* உலகின் சிறந்த கால்பந்து வீரராக  பிரேசில் வீரர் வினிசியஸ் தேர்வு.

Today's Headlines

* The National Energy Conservation Award has been given to Chennai ICF for making energy saving a special feature in the production of Vande Bharat trains.

* The National Green Tribunal has ordered the Tamil Nadu Pollution Control Board to recover the cost of removing medical waste dumped in Tamil Nadu from the Kerala Pollution Control Board.

* Vijay Mallya's assets were sold and Rs. 14,000 crore was given to banks: Nirmala Sitharaman.

* Russia has announced that it has developed a vaccine for cancer. It is reported that this vaccine, which is unknown in the market early next year, will be available free of cost.

* International rankings: Indian player P.V. Sindhu has moved up one place to 15th in the women's singles category.

* Brazilian player Vinicius has been selected as the best footballer in the world.
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment