Pages

Thursday, December 5, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 06.12.2024

  

Dr. அம்பேத்கர்

 






திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

 குறள் எண்:849

 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
 கண்டான்ஆம் தான்கண்ட வாறு.

பொருள்:அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்."

பழமொழி :

சிறுகக் கட்டிப் பெருக வாழ்.  

 Built a small house and live thriftily.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

உங்களின் பணிவு உங்களின் முன்னேற்றமாக மாறும் --- ரமணர்

பொது அறிவு : 

1. தாவர இலைகளின் பச்சையத்திற்கு காரணம் என்ன? 

விடை: குளோரோஃபில் 

2. பெற்றிடத்தின் வழியே பரவாதது எது?

 விடை: ஒலி

English words & meanings :

 Selfishness.      -    சுயநலம்,

 Shame.              -    அவமானம்

வேளாண்மையும் வாழ்வும் : 

பல நாடுகள், கரிம வேளாண்மையின் வெளிப்புற நன்மைகள் என்று கொள்ளப்படும், குறைந்த அளவிலான நீரின் உபயோகம், நீர் மாசுபடுதல் குறைதல், சத்துக்கள், மண் அரித்தழிப்பு குறைதல், கரியமில வாயுவின் வெளிப்பாடு குறைதல், பல்லுயிரினங்கள் அதிகரித்தல் மற்றும் வகைப்படுத்தப்பட்ட பலன்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. 

டிசம்பர் 06

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது

நீதிக்கதை

 கழுகு


ஒரு நாள் காகம் ஒன்று கழுகின் மேல் அமர்ந்து கொண்டு   தனது அலகால் அதன் கழுத்தை கொத்த தொடங்கியது. 


ஆனால் மறுபுறம் கழுகோ காகத்தை திரும்ப தாக்கவில்லை. தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் அமைதியாகவே சிறிது நேரம் இருக்கும்.


 பின்பு, கழுகு எளிமையாக தனது சிறகுகளை விரித்து, வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.

 உயரம் கூட கூட காகம் சுவாசிக்க இயலாமல் சிரமப்பட்டு கீழே 

விழுந்துவிடும்.


நீங்களும் உங்களை விமர்சனம் செய்பவர்களை கண்டு  உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை இழுத்துச் செல்லுங்கள். ஒரு நாள் அவர்களே காணாமல் போய்விடுவார்கள்.

இன்றைய செய்திகள்

06.12.2024

*பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் அறிவிப்பு.   

 *தமிழ்நாட்டில் வரும் 9-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 ‌*கல்லூரிகளை மேம்படுத்த 152 கோடி ரூபாய்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.   
             
 *தங்களது சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில் ஜிம்பாவே அணி பாகிஸ்தான் அணியை பரபரப்பான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Today's Headlines

*Announcement of special small business loan scheme camp for small businessmen of Villupuram, Cuddalore, Kallakurichi, Thiruvannamalai, Dharmapuri and Krishnagiri districts affected by Cyclone Benjal.    

* While the half-yearly examination will start from 9th in Tamil Nadu, the school education department has said that the half-yearly examination will start in the first week of January for the districts affected by rain due to the storm.Minister Anbil Mahes said.

 * 152 crore rupees to improve colleges: Government of Tamil Nadu financial allocation - Minister Kovi Chezhiyan announced. 

* Zimbabwe beat Pakistan by two wickets in the final match of the three-match T20I series at home.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment