Pages

Wednesday, October 16, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.24

  

உலக வறுமை ஒழிப்பு நாள்

   




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?

பொருள்:பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

பழமொழி :

A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. Vermiculture என்பது

விடை:  மண்புழு வளர்த்தல்

2. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி

விடை:  வெர்னியர்

English words & meanings :

 Pot-பானை,

Spoon-கரண்டி

வேளாண்மையும் வாழ்வும் : 

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.

இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

அக்டோபர் 17

உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

நீதிக்கதை


 அறிவில் சிறந்தவர் யார் ? 

விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள். 

 ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை அரச சபையில் பரீட்சித்துப் பார்ப்போம் வெல்பவருக்கே பிரதம மந்திரி பதவி” என்றார்.

மறுநாள் அரசவையில் ராயரும் மகாராணியும் கொலு வீற்றிருக்கும் போது இராயர் சபையோரை பார்த்து “நான் நேற்றிரவு அந்தப்புரத்தின் நிலா மாடத்தில் இருக்கும்போது ஒருவன் எனது மார்பில் காலால் எட்டி உதைத்து எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்யலாம் ?” எனக் கேட்டார். 

உடனே மகாராணியால் சிபாரிசு செய்யப்பட்ட சாஸ்திர பண்டிதர் எழுந்து “உலகத்தில் ராஜாதிராஜனாக விளங்கும் தங்களை அலட்சியம் செய்து தங்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அவன் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், தங்கள் மார்பில் எட்டி உதைத்த அவன் கால்களையும் வெட்டி எறிய வேண்டும் !” என்றார். 

இராயர் அப்பாஜியை பார்த்து நீ என்ன சொல்கிறாய் என்றார். அதற்கு அப்பாஜி “உங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொற்சலங்கையும், தண்டை கொலுசும் போட்டு உங்கள் முகத்தில் எச்சில் உமிழ்ந்த வாயை முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும். ஏனெனில் தங்களுடைய அந்தப்புரத்தின் நிலா மாடத்துக்கு வந்து தங்கள் வீர மார்பில் எட்டி உதைத்துத் தங்கள் திருமுகத்தில் எச்சிலை உமிழக் கூடியவன் தங்களுடைய பச்சிளம் பாலகனான இளவரசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?” என்றார். 

ராயர் மனம் மகிழ்ந்து “அப்பாஜி நீ சொல்வது சரிதான்” என்றார். 

பின்பு இராணியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா ? யார் அறிவில் வல்லவர் என்பதை ?” எனக் கேட்பவர் போல் பார்த்தார். 

நீதி:  எப்போதும் சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

17.10.2024

* பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்று தருவதாகக் கூறி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* 45% பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

* இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்.

* உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல். அர்ஜென்டினா வெற்றி.

* இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Today's Headlines

* The school education department has warned to be careful with gangs that extort money from parents by claiming to give incentives to school students.

 * Cyclone No. 1 has been activated in Pampan due to the presence of a low pressure zone in the Bay of Bengal.

 * People with 45% speech and language impairment can also study MBBS: Supreme Court judgement.

 * 3% hike in dearness allowance for central government employees.  The approval was given in the Union Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi.

* Pakistan has no right to interfere in India's internal affairs: Indian Ambassador to UN

 * World Cup Soccer Qualifiers: Messi Scores Hat-trick  goal .Argentina wins.

* The first day of the first Test match between India and New Zealand has been cancelled.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment