Pages

Thursday, September 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2024

 

உலக சுற்றுலா தினம்

    




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

பொருள்: நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும்படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி :

எறும்பு ஊரக் கல்லும் தேயும். 

 Persistence never fails.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.

பொது அறிவு : 

1. மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடல் உறுப்பை தாக்குகிறது? 

 கண்கள்

 2 . கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? 

 அண்டார்டிகா.

English words & meanings :

 intend-கருத்து,

  plan-திட்டம்

Applicationsyû வாழ்வும் : 

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

செப்டம்பர் 27

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 நரியும் புலியும் 



ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி ஒன்று பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னையும் பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள், என்ற எண்ணத்தில்,வண்ணம் பூசுபவனிடம் சென்ற நரி  “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது வண்ணம் பூசு என்றது”. அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினான்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது. இந்த நரி “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்று ஊளை இட ஆரம்பித்தது. என்னதான் அது புலியை போல் வண்ணம் பூசி இருந்தாலும், அதன் குரல் நரியை போல் தான் இருந்தது.புலியை போல் அதனால் சத்தம் இட முடியவில்லை. 


இதன் சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயின. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி: நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

27.09.2024

* பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

* மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர்.

* சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

* விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

* மும்பையில்  கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

* உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

* சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Payments for 1,400 temporary graduate teachers working in the school education sector till November have been released.

 * Food Minister Chakrapani said that 17.5 lakh people have been given family cards in 40 months in Tamil Nadu.

 * A 1000-year-old Esakasai inscribed with the name of Rajarajacholan I (985-1012 AD) was found by the girls of Tirupullani Government School of Ramanathapuram district while playing in a hole in the soil.

 * Chennai District Collector Rashmi Siddharth Jagade said that they should apply for the best girl child award for the year 2024-25 under Chennai district by September 30.

 * The Tamil Nadu Electricity Board has started the work of setting up a separate channel for power distribution to agriculture.

*  Normal life of people affected due to heavy rains in Mumbai.

 * President Vladimir Putin has warned European countries that Russia will not hesitate to use nuclear weapons if there is a serious attack on Russia using Ukraine.

*  Macau Open International Badminton: Indian player Srikanth qualified for 2nd round.

 * Chinese Open Tennis: Janic Siner advances to next round

 * The 2nd Test between Sri Lanka and New Zealand started yesterday.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

3 comments:

  1. Respected madams, Daily prayer message fantastic, very useful. Thank you.

    ReplyDelete
  2. Respected madams,

    All part ,I like it, especially story part, one small obligation news 5 points enough madam, if taken print students need to study 7 points it takes little more time. Please consider it. Thank you.

    ReplyDelete
  3. Thank you mam sure we will decide in our team

    ReplyDelete