Pages

Wednesday, September 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.2024

     

ஜெசி ஓவன்ஸ்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண் :783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

பழமொழி :

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.

 Laughter is the best medicine.

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தினசரி கடமைகளைத் திட்டமிட்டு 

ஒழுங்காக செய்து வந்தால் 

வெற்றியும் தைரியமும் 

தொடர்ந்து கிட்டும்.


- மால்ட்ரிக் 

பொது அறிவு : 

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

ஞானபீட விருது

 2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? 

 ஐரோப்பா.


English words & meanings :

 uniqueness-தனித்துவம்,

   embarrassment-சங்கடம்

வேளாண்மையும் வாழ்வும் : 

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.

செப்டம்பர் 12

ஜெசி ஓவென்ஸ் அவர்களின் பிறந்தநாள்


ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

நீதிக்கதை

 வித்தியாசாகரரை நூலால் வென்றது!


ஒரு சமயம் வித்தியாசாகரர் என்னும் பண்டிதர் ஒருவர் ஒரிஸாவிலிருந்து விஜய நகரத்துக்கு வந்து கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான புலவர்களை வாதப்போட்டிக்கு அறைகூவியழைத்தார்.


கிருஷ்ணதேவராயரின் அவையில் பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா முதலான ஏழு பெரும் புலவர்கள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் மட்டுமே திறமை  உள்ளவர்கள். ஆகையால் சகலகலா வல்லவராகவும், சகல விதமான சாஸ்திரங்களையும் கற்றறிந்தவருமான வித்தியாசாகரரை வெல்ல முடியாதென நினைத்துக் கவலையுடன் தலை கவிழ்த்தார்கள்.


ஆனால் தெனாலி ராமன் துள்ளியெழுந்து, மறுநாள் வித்தியாசாகரரை போட்டியிட வரும்படி ஏற்பாடு செய்தார் . மறுநாள் அரசவைப் புலவர்கள் எல்லோரும் தன்னைப் புடைசூழ்ந்துவர ஆஸ்தான புலவர்களின் தலைமைப் பண்டிதனைப் போல் தெனாலிராமன் வேடமிட்டுக் கையில் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட மூட்டை போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு விவாத மண்டபத்திற்கு வந்தான்.


அந்த மூட்டையை உற்று நோக்கிய வித்தியாசாகரர், “இது என்ன புத்தகம்?” என்றார். அதற்குத் தெனாலிராமன், “இதன் பெயர் திலகாஷ்ட மகிஷபந்தனம். நாளை இதன் உள்ளடக்கத்தைப் பற்றி நாமிருவரும் ஆழ்ந்து விவாதித்துப் போட்டியிடலாம் என்னை அந்த விவாதத்தில் வெல்ல முடியுமென்ற தைரியமிருந்தால் நாளை இங்கு வாரும்!” என்றான் தெனாலிராமன் கம்பீரமாக. 


தாம் கேள்விப்படாத புத்தகமாயிருக்கிறதே என்று விழித்து வித்தியாசாகரர், அன்றிரவு முழுவதும் எவ்வளவோ சிந்தித்தும் “திலகாஷ்ட மகிஷபந்தனம்” என்பதின் உட்பொருள் அவருக்கு விளங்காததால் அவமானத்திற்கு அஞ்சி பொழுது விடிவதற்குள் சொல்லிக் கொள்ளாமலே விஜயநகரத்தை விட்டு ஓடிவிட்டார்.


மறுநாள் அதையறிந்த அரசரும் , அரசவைப் புலவர்களனைவரும் தெனாலிராமனைப் புகழ்ந்து, “இராமா! உன் கையிலிருக்கும் புத்தக மூட்டையை அவிழ்த்துக் காட்டு! அதில் நீ இருப்பதாகக் கூறிய திலகாஷ்ட மகிஷபந்தனம் என்பது எவரும் கேட்டறியாத வினோதமான நூலாயிருக்கிறதே?” என்றனர். 


பட்டுத்துணியால் மூடப்பட்டதிருந்தா அதைப்பிரித்த கிருஷ்ணதேவராயர், அதிலுள்ள எள், விறகு, எருமை கட்டும் கயிறு முதலானவற்றைக் கண்டு திடுக்கிட்டார். தெனாலிராமன் அமைதியாக “அரசே! எள்ளுக்குத் திலகமென்று மற்றொரு பெயருண்டு; காஷ்டம் என்றால் விறகு மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது என்று பொருள். 


இந்த உட்பொருளை உணரமுடியாமல் வித்தியாசாகரர் ஓடியதில் சிறிதும் ஆச்சரியமில்லை!” என்று சிரித்தார் . சபையும் கொல்லென்று சிரித்தது. அரசரிடம் தெனாலிராமன் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார் .

இன்றைய செய்திகள்

12.09.2024

* தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஃபோர்டு மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.

* ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி: ஐடிஐ மாணவர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு.

* கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக, மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

* தமிழக கிராமப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்.

* மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை வழித் தடம் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் - சுவிட்சர்லாந்துக்கு முதலிடம்; 33-வது இடத்தில் இந்தியா.

* பாகிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

* ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது.

* 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்: கோப்பையை வென்றது சிரியா.

Today's Headlines

* CM Stalin invites Ford and IT Serv Consortium to make new investments in Tamil Nadu. 

* Career Coaching with Rs.14 thousand stipend: Chennai Metropolitan Transport Corporation invites ITI students. 

* The Government of Tamil Nadu has expressed pride that the Union Education Minister has appreciated that Tamil Nadu is the best in the country in terms of education. 

* Allocation of Rs 500 Crore to Rehabilitate 5,000 Water Bodies in rural areas of Tamil Nadu : Minister Information 
The Tamil Nadu government has informed that the researches on elephant tracks in the Western Ghats region are ongoing. 
List of best countries in the world - Switzerland tops; India at 33rd place. 

* Earthquake of 5.7 magnitude in Pakistan: Information by Meteorological Department of the country. 

 * The South Asian Junior Athletics Championship in which 7 countries including India and Pakistan, are participating started yesterday in Chennai.

 * The 45th Chess Olympiad began in Budapest, the capital of Hungary. 'Intercontinental' Football Series: Syria won the trophy.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment