Pages

Tuesday, July 30, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2024



 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:430

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

பழமொழி :

அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;

Fortune’s wheel is ever revolving

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

" தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தனக்கென தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!---- பிடேல் காஸ்ட்ரோ

பொது அறிவு : 

1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

விடை: திருநாவுக்கரசர்

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 concern-அக்கறை,

 cover-உறை

வேளாண்மையும் வாழ்வும் : 

விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய்க்கு எதிரானது.

நீதிக்கதை

 ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு.


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர்  குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.


ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.


 குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். 


அரசர்  சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.


அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.


இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதை அறிந்த அரசர், அவரவருக்கு இட்ட வேலையை செய்யவில்லை எனில் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.


இருவரும் அரசரிடம் சென்று  தங்கள் தவறை உணர்ந்து கொண்டோம். இனிமேல் இதுபோல் நடக்க மாட்டோம் என்று மன்னிப்பு கூறினர். அரசரும் மன்னித்து அவரவர் வேலையை செய்ய உத்தரவிட்டார்.

 


இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. இருவரும்  முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.

இன்றைய செய்திகள்

31.07.2024

🌟அம்மா உணவகங்களை சீர்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

🌟இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்.

🌟மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்.

🌟கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர்  உயிரிழந்த நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

🌟லெபனானை தாக்க இஸ்ரேல் திட்டம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை.

🌟பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

🌟பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்.

🌟மகளிர் டி20 தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்.

Today's Headlines

🌟Allocation of Rs 7 Crores for renovation of Amma restaurants: Resolution in Chennai Corporation meeting.

 🌟4.49 lakh family cards are cancelled in Tamil Nadu due to death and migration of places: Cooperatives and Food department Secretary informantion.

 🌟Tamil Nadu ranking first in the export of electronic goods: Information from the head of the Government Industry Guidance Institute.

🌟 Heavy rains in Kerala's Wayanad have left many people dead in landslides. Kerala faces a huge impact.

 🌟Israel Plans to Attack Lebanon: Central Govt Advises Indians to Stay Safe

 🌟Paris Olympics;  Indian men's hockey team beat Ireland to record its 2nd win.

🌟 Paris Olympics Tennis: Djokovic beats Rafael Nadal

 🌟Women's T20 Rankings: Indian players on the rise.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment