Pages

Monday, July 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2024

   

பால கங்காதர திலகர்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம் :அறிவு உடைமை

குறள் எண் :424

எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

பொருள் :தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி,
தான் பிறரிடம்
கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

பழமொழி :

அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்

The fox knows much, but more, he that catcheth him

இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 

 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

கடப்பதற்கு தடைகளும், தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சலிப்பாக விடும்.------ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1.சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்?

விடை: அசோகர்

2. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் 

விடை: அரேபியா 

English words & meanings :

 Total-மொத்தமான,

 Absolute-முற்றிலும்

வேளாண்மையும் வாழ்வும் : 

கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி மற்றும் விஷக்கடி போன்றவற்றிக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும் சீரக சம்பா செரிமானத்திற்கு நல்லது என்பது போன்ற குறிப்புகளும் சித்தா மற்றும் ஆயுர்வேத நூல் குறிப்புகளில் உள்ளன.

ஜூலை 23

பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்


பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilakமராத்திबाळ गंगाधर टिळकபால கங்காதர திலகர்23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. 

நீதிக்கதை

 சத்திரம்


ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல் தேசம் செல்ல நேரிட்டது.செல்லும் வழியில் சத்திரம் ஒன்று தென்பட்டது.மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்.

 அது அயல் நாட்டு மன்னனின் அரண்மனை ஆகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் இருக்கும் சத்திரம் என்று அவர் நினைத்தார். 

அந்த  அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையை கட்டிவிட்டுப் பார்த்தார்.ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கு இருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்கு சென்றார். அது படுக்கையறை உண்ட மயக்கத்தில் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார். 

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்துவிட்டார். தன் உணவை  உண்டுவிட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனை பார்த்ததும் சினம் கொண்டு பீர்பாலை தட்டி எழுப்பினார்."என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவை உண்டு என் படுக்கை அறையிலேயே   படுத்திருக்கிறாயே" என்று  அதட்டினார். அதற்கு பீர்பால் "ஓஹோ! இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்". 

பீர்பாலின் பதிலை கேட்ட அரசர் கோபமுற்று "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? அரண்மனைக்கும், தர்மசத்திரத்திற்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையா? என்று கடிந்தார் மன்னர் .

"மன்னர் அவர்களே! இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்மசத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை" என்றார்  பீர்பால் 

"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார். நாளை போய்விடுவார். மறுநாள் வேறொருவர் வருவார்.பிறகு சென்று விடுவார்.இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல, நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே" என்றார் மன்னர்.

மன்னர் அவர்களே "உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்"? 

"இதே அரண்மனையில் தான்".

"உமது தந்தையார்"?

"இதே அரண்மனையில் தான்".

"நாளை உங்களுக்கு பின் யார் தங்குவார்கள்"?

"இது என்ன கேள்வி? எனது மகன் தங்குவான்.

"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை. எனவே, சத்திரத்திற்கு அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை" என்றார் பீர்பால்.

 பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது வந்திருப்பவர் சாமானியர் இல்லை என்பதும் விளங்கியது.

" தாங்கள் யார்"? என்று மரியாதையுடன் வினவினார் அரசர்." என்னை பீர்பால் என்று அழைப்பார்கள்" என்று பதில் சொன்னார் பீர்பால். 

"அந்த மாமேதை நீங்கள் தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்.  வருத்தம் வேண்டாம் என்றார் அரசர்.

மேலும் சில நாட்கள் அந்த மன்னனின் அன்பு கட்டளையை ஏற்று, அவரின் விருந்தினராக தங்கி இருந்து விட்டு,பிறகு தன் செல்ல வேண்டிய இடத்திற்கு புறப்பட்டார் பீர்பால்.

இன்றைய செய்திகள்

23.07.2024

🔸நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கோவை மாவட்ட சுகாதார துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

🔸சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம்: அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது  சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா)

🔸சுயசான்று அடிப்படையில் கட்டிடங்களுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதியளிக்கும் திட்டம் தொடக்கம்.

🔸9 கிராம ஊராட்சிகளை இணைத்து ராஜபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டம்.

🔸இந்தியாவில் 2050-ம் ஆண்டுக் குள் முதியவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று ஐ.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் பரிந்துரை.

🔸வங்கதேசத்தில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

🔸ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்; நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நுனோ போர்ஹெஸ்.

🔸மாநில துப்பாக்கி சுடும் போட்டி: மதுரை வீராங்கனை 12 பதக்கங்கள் வென்று சாதனை.

🔸மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்.

Today's Headlines


🔸Due to the spread of Nipah virus, the health department of Coimbatore is conducting intensive checks on the Tamil Nadu-Kerala border area.

🔸 Chennai Metropolitan Integrated Transport Project: Chennai Integrated Metropolitan Transport Authority (KUMDA) has invited tenders to prepare the project report.

 🔸Online instant approval of buildings based on ID scheme launched.

🔸 A plan to upgrade Rajapalayam into municipal corporation by merging 9 village panchayats.

 🔸The number of elderly people in India will double by 2050.  Accordingly, investments in the health sector should be increased," recommended the Indian head of the UN Population Fund.

 🔸Reservation cut to 7 percent in Bangladesh: Student riots return to normal after Supreme Court's verdict

 🔸Swedish Open Tennis;  Nuno Borges beat Nadal to win the title.

 🔸State shooting competition: Madurai athlete wins record 12 medals

🔸 Indian player Harmanpreet Kaur is the second most successful player in women's T20 cricket history.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



No comments:

Post a Comment