Pages

Tuesday, June 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.6.2024

 

கற்கால வெட்டுக்கருவி

 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.

பொருள்:கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால்,
கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

பழமொழி :

Honesty is the best policy. 

 நேர்மையை சிறந்த பண்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

" உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது, அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் கிடையாது!"------ ஆபிரகாம் லிங்கன்.

பொது அறிவு : 

1. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?


விடை: கங்கை

2. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

விடை: 1947

English words & meanings :

 careful-கவனமாக, 

wary-கவனமாக நடந்து கொள்கின்ற

வேளாண்மையும் வாழ்வும் : 

ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

நீதிக்கதை

 பேசிய வார்த்தைகள்


ஒரு கிராமத்தில் குருவை பார்க்க ஒருவர் வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. "என்னவாயிற்று"? என்று கேட்டார் குரு.  அதற்கு அவர் " ஒருவரை கோபத்தில் கண்டபடி திட்டி விட்டேன். அவர் மிகவும் மனம் ஒடிந்து போய்விட்டார். இப்போது எனக்கு வருத்தமாய் இருக்கிறது.

"அப்படியா"? என்றார் குரு. 

"ஆமாம் குருவே, இப்போது நான் திட்டியதற்கு  நிவர்த்தி செய்ய விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்

 மெலிதாக சிரித்த குரு,"போ,ஒரு

 மூட்டை பஞ்சை வாங்கி ஏதாவது ஒரு இடத்தில் கொட்டு. பின்பு  கொட்டிய பஞ்சை எல்லாம் ஒன்று விடாமல் எடுத்து மூட்டை கட்டி கொண்டு வா சொல்கிறேன்" என்றார்.

 போனவர் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார்." குருவே பறந்து போன பஞ்சை எல்லாம் சேகரிக்க இயலவில்லை" என்றார்.

 "வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இது போல் தான். கொட்டிவிட்டால் திரும்ப எடுக்க முடியாது. எப்போதும் கவனமாக பேச வேண்டும்"என்றார் குரு.

இன்றைய செய்திகள்

26.06.2024

* 2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* அரசு சட்டக் கல்லூரிகளில் 'சட்டத்தமிழ்' எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

* சென்னானூரில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு.

* தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

* ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு.

* தேசிய தடகள போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு.  65 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா.

Today's Headlines

* 75,000 government jobs will be filled by January 2026: CM Stalin announced.

 * Law Minister S. Raghupathi announced yesterday in the Legislative Assembly that a new course called 'Chatta Thamizh' will be introduced in government law colleges.

 * 4,000-year-old neolithic cutting tool is found in ongoing excavation site at Chennanur.

*  Central government has started spectrum auction for telecom services.

 * Earthquake in Japan;  registered as 5.7 on the Richter scale.

*  Tamil Nadu Team Announcement for National Athletics Tournament   65 male and female players have been placed.

 * Copa America: Colombia beat Paraguay and won.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 

No comments:

Post a Comment