Pages

Tuesday, April 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.04.2024

  

உட் பஃபெல்லோ தேசிய அருங்காட்சியகம்




திருக்குறள்: 

"""பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

விளக்கம்:

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

பழமொழி :

Stones are thrown only at fruit bearing trees

காய்த்த மரம் தான் கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.

பொது அறிவு : 

1. சங்க காலம் எனப்படுவது?

விடை: கி.பி 300 முதல் கி.மு 300 வரை  

2. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்கு உள்ளது?

விடை: கனடாவில் உள்ள உட் பஃபெல்லோ நேஷனல் பார்க்

English words & meanings :

 Concentration ஒருநிலைப்படுத்துதல்
Determine தீர்மானித்தல்/முடிவு
Deduct.  கழிவு, தள்ளுபடி

ஆரோக்ய வாழ்வு : 

பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.

நீதிக்கதை

 கோபத்தை மறந்த ராமு


குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

10.04.2024

*ஏப்ரல் 11 அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்- தலைமை காஜி அறிவிப்பு.

*கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 19ஆம் தேதி விடுமுறை: பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிப்பு.

*கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.

*கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

*சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காலின்ஸ்.

Today's Headlines

*Ramzan will be celebrated on April 11- Chief kaji announced.

 *19th Holiday for Koyambedu Market: it is notified that Flower Market will function as usual.

 *Flood in Gothai River;  bathing in Tirparapu Falls is prohibited.

 *Weekly special trains will be operated between Chennai - Nellai during summer vacation.

 *Charleston Open Tennis: Collins won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment