Pages

Sunday, March 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023

  

வயலின்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

விளக்கம்:

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

பழமொழி :

Practise makes man perfect

சித்திரமும் கைப்பழக்கம்

இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். --வில்லியம் ஜேம்ஸ்

பொது அறிவு : 

1.இசைக்கருவிகளின் இராணி என்றழைக்கப்படும் இசைக்கருவி எது? 

வயலின். 


2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?

விடை: ஆறு கால்கள் 

English words & meanings :

 Tangible - definite; உறுதியான.
 Trivial -a little value or importance; அற்பமானது.

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை : சினிக்கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி உள்ளதால் மிகுந்த சத்துகளின் கீரையாக திகழ்கிறது.

நீதிக்கதை

 நிலையாமை


தோன்றும் பொருள்கள் அழியுந்தன்மை


"ஒரு செல்வன் தான் தன்  காலத்தில் தேடிய செல்வங்களை அறம் செய்யலாம்" என்று சம்பாதித்தவற்றைப் பொன்னாக மாற்றி அவற்றை உருண்டையாகச்செய்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஒருநாள் திடீர் என்று நாக்கு இழுத்து மேல் கிளம்பியது, அந்நேரத்தில் பேசமுடியாமையால் கையை வளைத்து "உருண்டை பொன் இருக்கிறது, எடுத்துவாருங்கள்"அறம் செய்யவேண்டும்" என்று அருகில் இருந்த உறவினர்களிடம் காட்டினான். இவ்வுண்மையறிந்த அவன் மனைவி, புளி உருண்டை வேண்டும் என்கிறார். மருத்துவர் புளியே தொடக் கூடாது என்று சொல்லியுள்ளார். அது இப்போது தொடக்கூடாது என்றாள். இதைக்கேட்டு, 'நல்லறிவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்மம் செய்யாது இருந்தோமே' என்று வருந்தி இறந்தார். இதனால் எந்தக்காலத்தில் இந்தச் சரீரம் நீங்கும் என்பது யாவருக்கும் தெரியாமையால், "யாவரும் நல்லறிவுடன் இருக்கும்போதே நல்ல காரியங்களைச் செய்து முடித்தல் வேண்டும்" என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

இன்றைய செய்திகள்

18.03.2024

*அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றம்.

*மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு மாதம் பத்தாயிரம் செலவழிப்பதாக மக்கள் வேதனை.

*மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை ஏற்பாடு.

*கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்தானதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.

*ஐ.பி.எல்.முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதல்..... இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை.

*மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோ விச் விலகல்.

Today's Headlines

*Counting of votes in Arunachal Pradesh, Sikkim shifted the date is changed to June 2.

 *Severe shortage of drinking water in West Mambalam: People are suffering as they spend ten thousand rupees per month for water.

 *Income Tax Department  arranged  control room for 24-hours in connection with Lok Sabha elections.

 * 44 electric trains were cancelled due to track maintenance work between Kodambakkam and Tambaram. This leads to increased  number of passengers in buses.

 *CSK-RCB clash in first match…..Ticket sold through online today.

 *Miami Open tennis: No. 1 player Joko Wich withdraws.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment