Pages

Wednesday, February 21, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.02.2024

  





திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம்:

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

பழமொழி :

No Pains ; No Gains

உழைப்பின்றி உயர்வு இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்

பொது அறிவு : 

1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.

விடை: 15 ஆண்டுகள்

2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?

விடை: பாரதிதாசன்

English words & meanings :

 engraver - Carver செதுக்குபவர். evidence - proof ஆதாரம்

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை :  இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. அதாவது ரத்த மூலத்தையே குணமாக்கக்கூடிய அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது என்கிறார்கள்.. இந்த கீரையுடன் துத்தி இலைகளையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலே ரத்த மூலம் குணமாகுமாம்.. சிறுநீர் எரிச்சலும் தணிந்துவிடும். உடலிலுள்ள சூட்டை அகற்றுவதுடன், தீக்காயம்வரை மொத்தத்தையும் போக்கக்கூடியது.

பிப்ரவரி 22

ராபர்ட் பேடன் பவல் பிரபு அவர்களின் பிறந்தநாள்


ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 221857 - ஜனவரி 81941சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

இளைஞர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் நினைவுநாள்




மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmedஇந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்துமுசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கத

குரு ஒருவருக்கு, ஒரு தனவந்தர்

பசுவைத் தானமாக அளித்தார். அந்தப் பசுவின்

கொம்புகளின் முனையில் தங்கத்தால் கொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. பசுவின்மீது, மிகவும் விலையுயர்ந்த, அழகிய வேலைப்பாடு நிறைந்த போர்வையைப் போர்த்தி, தானமாக அளித்தார். தானம் பெற்ற குருவும் மிக்க மகிழ்ச்சியடைந்தார். பசுவின் தலைக்கயிற்றைக் கைகளால் பிடித்துக் கொண்டு, தம்முடைய வசிப்பிடம் நோக்கி நடந்தார். அவருடைய வீடு சற்று தொலைவில் இருந்தது. நடந்து செல்லும் போது, நான்கு திருடர்கள் பசுவின் கொம்புகளில் உள்ள தங்கக் தொப்பிகளைப் பார்த்தார்கள். எப்படியாவது பசுவைக் கவர்ந்து செல்ல வேண்டுமென்று அவர்கள் நால்வரும் திட்டமிட்டார்கள்.

குருபசுவைக் கையில் பிடித்தபடியே நடந்து சென்றபோது ஒரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான்.

"ஐயயோ, ஏனய்யா புலியைக் கையில் பிடித்துக் கொண்டு போகின்றீர்? உமக்குப் பைத்தியமா என்று கேட்டுவிட்டு பயப்படுவது போல நடித்தான். “ஏனப்பா, இது புலி இல்லை பசு. இது கூடவா உனக்குத் தெரியவில்லை?” என்று குரு சிரித்துக் கொண்டே நடக்கலானார்.

சற்றுதூரம் சென்றதும் மற்றொரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான். குருவுக்கு அருகில் வந்து விட்டு, பிறகு சட்டென்று சில அடிகள் பின்னால் சென்றான். பின்பு, "இதென்ன அநியாயம்? நாட்டில் ஜனங்கள் நடக்கும் பாதையில் புலியுடன் போகிறீர்களே, புலி யாரையாவது அடித்து விட்டால் என்ன ஆகும்?" என்று திருடன் கேட்டதும், குரு தாம் கையில் பிடித்திருந்த பசுவை ஏற இறங்கப் பார்த்தார்.

"நீ என்ன பார்வை இல்லாதவனா? பசு மாட்டைப்போய் புலி என்கிறாயே, போ, போ உன் வழியைப் பார்த்துக் கொண்டு" என்று பதிலளித்து விட்டு நடந்தார்.

"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், பிறகு உன்பாடு" என்று கூறிவிட்டு திருடன் சென்று விட்டான்.

குரு, பசுவை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார். பசுவைப் போய் புலி என்று ஏன் சொன்னார்கள் என்று யோசித்தபடியே நடந்தார்.

எதிரில் மூன்றாவது திருடன் வந்தான் “புலி, புலி ஓடி வாருங்கள். புலியை ஊருக்குள் அழைத்துப் போகிறான்" என்று திருடன் கூச்சலிட்டதும் குருவிற்கு சந்தேகம் வந்தது. பயம் தோன்றியதும், பசுவின் தலைக்கயிற்றை விட்டுவிட்டு, விலகி நடக்க ஆரம்பித்தார்.

நான்காவது திருடன் அப்போது அவர் முன்னால் வந்து "ஐயா, உங்கள் பின்னால் புலி ஒன்று வருகிறது. அது உங்களைக் கடித்துத் தின்று விடலாம். வாருங்கள் ஓடலாம்" என்று கூறியதும் குரு பசுவை, புலி என்றே நம்பி விட்டார். உடனே வீட்டை நோக்கி ஓடலானார்.

அவர் ஓடியபின்பு நான்கு திருடர்களும் பசுவை ஒட்டிக் கொண்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

 யார் எதைச் சொன்னாலும் அதிலுள்ள

உண்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமையாகும்.

இன்றைய செய்திகள்

22.02.2024

*"தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024" முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

*மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் 26 ஆம் தேதி திறப்பு.

*ஏற்காடு மலை கிராமங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டெருமைகள்.

*தென் மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.

* திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, 
சகோதரி  செ.காவியா இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார், 
துருக்கியில் நடைபெறும் உலகநாடுகள் பங்குகொள்ளும் கால்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார்.

Today's Headlines

*"Tamil Nadu State Women's Policy 2024" is released by Chief Minister M K Stalin.

 *"Karunanidhi Memorial" at Marina beach will be inaugurated on 26th.

 *Bisons have entered  hill villages of Yerkad and  rampaged the villages.

 *Chance of rain again from tomorrow in southern districts.

 *Thiruvarur District, Mannargudi,
Sister S. Kavya has made it to the Indian football team.
She is going to play for the Indian team in the World Cup in Turkey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment