Pages

Monday, February 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2024

   

உலக நீதி நாள்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:360
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

விளக்கம்:

விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

பழமொழி :

Nip the brier in the bud

முளையிலேயே கிள்ளி எறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு : 

1. பின்வருவானவற்றுல் பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?

எறும்புத்திண்ணி 

சிம்பன்ஸி

கடற்பசு 

தேவாங்கு

விடை: எறும்புத்திண்ணி 

2. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி

English words & meanings :

 callow-lacking experience of life; immature.அனுபவம் அற்ற. Capitulation -the action of ceasing to resist an opponent or demand.சரணாகதி.

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை:
இதன் தண்டுகளில் ஏராளமான புரோட்டீனும், மாவுச்சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் அடங்கியிருக்கின்றன. கன்றுக்குட்டி புல்: அதனால்தான், கன்றுக்குட்டிகளுக்கு இந்த கீரை மிகவும் பிடிக்குமாம்.

பிப்ரவரி 20

உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை

 கைப்பிடியளவு மலையளவு


ஒரு முனிவர் உலகிலுள்ள அனைத்தையும் கற்க வேண்டுமென்று விரும்பினார். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் வேறு எதிலும் மனத்தைச் செலுத்தவில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்வது வரை படித்துக் கொண்டே இருந்தார். படித்ததன் பொருளை அறிந்து கொள்வதும் அதனை மனனம் செய்வதுமாக நாட்கள் சென்றன. வருடங்கள் கழிந்தன. முதுமையடைந்து முனிவர் இறப்பை எய்தினார்.

மறுபிறவி எடுத்த பின்பும் முற்பிறவியில் செய்தது போல படிப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். மேலும் மேலும் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால், முனிவர் தொடர்ந்து கற்பதிலேயே மனத்தைச்

செலுத்தி வந்தார். காலம் சென்றது. வயதான பின்பும் முனிவர் கற்பதிலேயே நாட்டம் கொண்டிருந்தார். ஆயினும் கற்று முடித்து விட்டோம் என்ற நிறைவு அவருக்கு ஏற்படவில்லை. நாளடைவில் பிறவியும் முடிந்து மூன்றாவது முறையாக பூவுலகில் பிறந்தார்.

அப்பிறவியிலும் அவருடைய நாட்ட மெல்லாம் கற்பதில் மட்டுமே இருந்தது. பலகாலம் பல்வேறு சாஸ்திரங்களைக் கற்ற பின்பும் இன்னும் கற்பதற்கு நிறைய மீதி இருப்பதாகவே தோன்றியது.

அப்போது ஒரு நாள் இந்திரன், முனிவர் முன்பு தோன்றினான். "முனிவரே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டான்.

முனிவரின் குடில் முழுவதும் ஏட்டுக் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முனிவர் இந்திரனை வரவேற்று "படித்துக் கொண்டிருக் கிறேன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா என்றார்.

"தெரிகிறது கற்கவேண்டும் என்ற உங்களுடைய தாகம் அடுத்த பிறவியிலும் தொடருமா? என்று இந்திரன் வினவினான்.

"இங்குள்ள ஏடுகள் தவிர இன்னும் ஏதேனும் இருந்தால் அடுத்த பிறவியிலும் என் பணி தொடரும்" என்றார் முனிவர்.

இந்திரன், குடிலுக்கு வெளியில் வருமாறு முனிவரை அழைத்தான். "முனிவரே, இதோ நம் எதிரில் தெரிகிறதே அது என்ன?” என்றான்.

"அதுவா? அது ஒரு மலை" என்றார் முனிவர். அவர்கள் இருந்த இடத்திற்கு எதிரில் பெரியதொரு மலை வானளாவ உயர்ந்து நின்றது.

"சரி, இதோ என் கைப்பிடியில் உள்ளது என்ன?"

"இது கூடவா தெரியாது? கைப்பிடியில் மண் உள்ளது" என்றார் முனிவர்.

"முனிவரே! நீங்கள் இத்தனை பிறவிகளில் கற்றது என் கைப்பிடியிலுள்ள மண் அளவுதான். நீங்கள் கல்லாதது இதோ இந்த மலையளவு.புரிந்ததா? என்று இந்திரன் கூறியதைக் கேட்டதும் முனிவர், "கற்றது கைம்மண் அளவு கல்லாதது மலையளவு" என்று அறிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

20.02.2024

*தமிழக பட்ஜெட் 5 லட்சம் ஏழை குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு.

*தமிழக பட்ஜெட்: இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு.

*ஆந்திராவில் பறவை காய்ச்சல்: தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை.

*பள்ளி, கல்லூரி தேர்வுகள் தொடக்கம்: தடையில்லா மின்சாரம் விநியோகிக்க உத்தரவு.

*புரோ ஹாக்கி லீக்:  பெனால்டி சூட் அவுட் முறையில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

* உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி: இந்திய பெண்கள் அணி வெற்றி.

Today's Headlines

*
5 lakh people's poverty will be eradicated through Tamil Nadu government budget says Minister Thangam Tennarasu.

 *Tamil Nadu Budget: Allocation of Rs 100 crore for "Illam Thedi Kalvi" Scheme.

 *Bird flu in Andhra Pradesh: Measures are taken to prevent it from spreading to Tamil Nadu.

 * School, college exams begins: government ordered to give uninterrupted power distribution .

 *Pro Hockey League: Indian women's team beat USA in penalty shootout.

 * World Table Tennis Championship Group Match: Indian Women win.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment