Pages

Tuesday, February 6, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2024

    

தேவநேயப் பாவாணர்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம்:

 பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

பழமொழி :

Might is right

வல்லன் வகுத்ததே சட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :1

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு. --சோஃபோக்கிள்ஸ்

பொது அறிவு :

1. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

விடை: லக்னோ

2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

English words & meanings :

 veils (v)- to hide or cover திரை, முகமூடி ; vexation (n)- worry or anger துயரம் (அ) எரிச்சல்

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : கோவைக்கீரையின் சாறினை காலை, இரவு முறையே 2 ஸ்பூன் குடித்து வர நாள்பட்ட நெஞ்சு சளி, இருமல் ஆகியவை குணமடையும். அதோடு இந்த சாறு நாள்பட்ட புண்களையும் ஆற்ற உதவுகிறது.

பிப்ரவரி 07

தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்

தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

 இரண்டு ஆட்கள் ஒருவர்க்கு ஒருவர் துணையாய்ப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு கோடாரி கிடந்தது.

அதை முதலில் பார்த்தவர் "நான் ஒரு கோடாரியைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டு அதனை எடுத்தார்.

உடனே மற்றவர், "அப்படிச் சொல்லக்கூடாது, நண்பரே. நான் நீ என்று பிரித்துப் பேசக் கூடாது. 'நாம் கண்டெடுத்தோம்' என்று தான் இனி சொல்ல வேண்டும்” என்றார்.

அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் அந்தக் கோடாரியைத் தொலைத்தவர் எதிரே வந்தார். இவர்களிடம் கோடாரி இருப்பதைக் கண்டு, 'கோடாரியை எடுத்தது யார்?' என அவர் கேட்டார்.

அதற்கு எடுத்தவர், "நாங்கள் எடுத்தோம்" என்றார். உடனே சற்று நேரத்திற்கு முன் அவருக்கு பேசக் கற்றுக் கொடுத்தாரே, மற்றவர், அவர், "தப்பு தப்பு அப்படிச் சொல்லக் கூடாது. கண்டெடுத்தவுடன் நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள், 'நான் கண்டெடுத்தேன்' என்று அதுதான் சரி. இப்போதும் அதைத் தான் சொல்ல வேண்டும். நாங்கள் என்று சொல்லக் கூடாது" என்று சொன்னார்.


நீதி : தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் ஒருமாதிரியும். இழப்பு கிடைக்கும் என தெரிந்தால் ஒருமாதிரியும் பேசுவது மனித குணம். அது தான் 'எலும்பில்லாத நாக்கு எதையும் பேசும்.

இன்றைய செய்திகள்

07.02.2024

*மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு.

* மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் தீ; ஆறு பேர் பலி 60 பேர் காயம்.

* 2026 அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு.

* மதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பூரணம்மாள் மேலும் ரூபாய் மூன்று கோடிக்கு நிலம் தானமாக வழங்கினார்.

* உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் இசை விழா நடைபெற்றது. இதில் 18 பேருக்கு கலை செம்மல் விருது வழங்கப்பட்டது.

* இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Today's Headlines

The central government decided to fence the entire Myanmar border area.

 * Firecracker factory got fire in Madhya Pradesh;  Six dead and 60 injured.

 * Target to complete AIIMS, Madurai by October 2026.

 * Pooranammal also donated three crore rupees worth of land to Panchayat Union Middle School in Madurai.

 * A music festival was held to celebrate the declaration of Chennai as a City of Music by the World Heritage Organization UNESCO.  In this, 18 people were given the Kalai Semmel Award.

 * The Indian team won the second Test cricket match against the England team.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment