Pages

Monday, January 29, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024

மகாத்மா காந்தி 

   

திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

 உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.


பழமொழி :

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

பொது அறிவு :

1.அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து 


2. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?

விடை : பாபநாசம்

English words & meanings :

 Gang.  கூட்டுக்குழு
Gap.    பிளவு,,கீறல்
Gasp.  மூச்சுத்திணறல்
Gel.     கூழ் போன்ற கரைசல்
Gaze கூர்ந்து பார்த்தல்

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.

ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

 எதிரிக்கு இடம் தராதே


மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.

இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.

பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது."ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்" எனக் கேட்டது.

"நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்றபடி கண்ணீர் விட்டது.

அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.

"நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்" என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.

பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.

அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.

பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.

"புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்."

"என்ன அது சொல்" என்றன.

"உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே" எனக் கூறிச் சிரித்தது.

"அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்"

"பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்."

பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.

நீதி : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.

இன்றைய செய்திகள்

30.01.2024

*மாநகர பஸ் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்.

*சென்னையில் இருந்து மீண்டும் ஹாங்காங், மொரிஷியஸ்க்கு நேரடி விமான சேவை.

*கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்.

Today's Headlines: 

*Introduction of online payment facility for city bus tickets.

 * Direct flights from Chennai to Hong Kong and Mauritius started again.

 * Shutdown of power generation at Kudankulam 's first nuclear reactor.

 * Our chief minister M.K. Stalin was in tour to Europe  for first time since he took office as CM 

 * Tamil Nadu won gold in kelo Indian Games Volleyball.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment