Pages

Wednesday, December 13, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2023

    

ஹெரோடோட்டஸ்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:320

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.


விளக்கம்:

 தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.


பழமொழி :

Hunger breaks stone walls

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

இரண்டொழுக்க பண்புகள் :1

.1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .


பொன்மொழி :

வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே..! அரிஸ்டாட்டில்

பொது அறிவு :

1. வரலாற்றின் தந்தை யார்?

விடை: ஹெரோடோட்டஸ்

2. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம் 
து?


விடை: அஸ்ஸாம்

English words & meanings :

 necessity - anything indispensable அவசியம் தேவை.neologism- a newly invented word or phrase புதிய சொல் உருவாக்கம்

ஆரோக்ய வாழ்வு : 

ஆவாரம் பூ: ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது தாகத்தை தணிக்கும் பானமாகவும் இருக்கும்.

நீதிக்கதை

 The Cat & the Birds – பூனையும் சிறிய பறவைகளும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பூனை இருந்துச்சு. அந்த பூனைக்கு அதிகமா உணவு கிடைக்கல. ஏன்னா அங்க வாழ்ந்த பறவைகள் எல்லாம் அதுங்களோட தாத்தா சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிடுச்சுங்க. அதனால அந்த பூனைகிட்ட இருந்து சுலபமா தப்பிச்சுகிட்டே இருந்துச்சுங்க. ஒருநாள் அந்த பறவைகள் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல ,இந்த விஷயத்தை பறவைகளோட பேச்சுல இருந்து தெரிஞ்சிகிடுச்சு பூனை. உடனே ஒரு கண்ணாடி மாட்டிகிட்டு பறவைகள் வசிக்கிற இடத்துக்கு போச்சு. நான் தான் பூனை டாக்டர் உங்க தாத்தாவுக்கு மருந்து கொடுக்கணும் என்ன உள்ள விடுங்கனு சொல்லுச்சு. அதுக்கு அங்க இருந்த ஒரு குட்டி பறவை சொல்லுச்சு ,அடடா டாக்டர் நீங்க ஏன் இவ்வளவு இளைச்சி போயிருக்கீங்க.  உங்க மருந்தை எந்த பறவையும் வாங்கலையோனு கேட்டு சிரிச்சிச்சு. தன்னோட உள்நோக்கத்தை அந்த பறவைகள் புரிஞ்சிகிடுச்சுனு தெரிஞ்சி போன பூனை அசடு வழிஞ்சது. மூத்தோர் சொற்களை அவர்கள் இல்லாதப்பவும் பயன்படுத்தின அந்த பறவைகள் ரொம்ப நாள் எந்த ஆபத்தும் இல்லாம வாழ்ந்துச்சுங்க.


நீதி : பெரியோர்,பெற்றோர் சொல் கேட்டு வளர வேண்டும்.

இன்றைய செய்திகள்

14.12.2023

*ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்வு.

*16, 17 ஆம் தேதிகளில் கனமழை; 9 மாவட்டங்கள் உஷார்.

*சத்தீஸ்கர் முதல் மந்திரியாக விஷ்ணுதியோ சாய் பதவி ஏற்பு.

*75 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் குளம்.

*ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்;  இரண்டு அறிமுக வீரர்கள் பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான்...!

Today's Headlines

*The purchase price of milk has been increased by Rs.3 per liter.

 *Heavy rain on 16th and 17th;  Alert given to 9 districts.

 *Vishnu Deo Sai takes charge as Chief Minister of Chhattisgarh.

 *Ayanavaram Kashi Vishwanath temple pond filled after 75 years.

 *Test against Australia;  Pakistan announces two debutants playing XI...!

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment