Pages

Wednesday, November 8, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2023

 

கவிக்கோ அப்துல் ரகுமான் 

 

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

விளக்கம்:

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.



பழமொழி :

Beauty is a short-lived reign.


அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.

2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

- சீனப் பழமொழி

பொது அறிவு :

1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

விடை: திருநாவுக்கரசர்

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 termination - the act of ending something இறுதி நிலை,முடிவு . terminology - a system of words குறிப்பிட்ட துறைக்குரிய சொற்கள்

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி பூ:
அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்.

நவம்பர் 09

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் 


அப்துல் ரகுமான் (S. Abdul Rahmanநவம்பர் 91937 - சூன் 22017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்




கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 271920; இறப்பு - புது தில்லிநவம்பர் 92005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிக்கதை

 ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.

பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.

அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும். சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு

இன்றைய செய்திகள்

09.11.2023

*இரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது மீறினால் ரூ.5000 அபராதம்.

*கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

*சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

*ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் ஷுப்மன் கில், பவுலிங்கில் சிராஜ் முதலிடம்.

*உலகக்கோப்பை 20203 நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

Today's Headlines

Firecrackers should not be carried in trains, fine of Rs.5000 if violated.

* Orange warning for very heavy rain has been issued for Coimbatore, Nilgiris, Tenkasi, Tirunelveli and Kanyakumari districts.

* Southern Railway has announced that a special train will be run between Chennai and Tuticorin on the occasion of Diwali.

*Prohibition on sale and bursting of Chinese-made firecrackers; Fireworks restrictions: Chennai Police Commissioner warns.

*ICC oneday cricket Rankings: Shubman Gill tops batting, Siraj tops bowling.

*World Cup 2023: England beat Netherlands with a consolation victory.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment