Pages

Sunday, October 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023

    




டியாகோ மாரடோனா


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.


பழமொழி :

Every pleasure has a pain.

எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி :

மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன. --மோலியர்

பொது அறிவு :

1. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது? 

லண்டன் மியூசியம்

2. பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ? 

1956

English words & meanings :

 lachrymose - showing sorrow ,அவதியான. lacerate - tear irregularly ,வெட்டு

ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன.வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ளது. 

அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்நாள்


1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 

நீதிக்கதை

 குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது.

அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார்.

கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் திரும்பினார்கள்.

‘‘என்ன?’’ குரு கேட்டார்.

‘‘அங்கே கிணறு இருக்கிறது. ஆனால் அதில் நீரை எடுக்க வாளி இல்லை. அதனால்...’’

‘‘அதனால்?’’

‘‘நாயின் தாகத்தைத் தீர்க்க முடியவில்லை’’ என்றார்கள்.

‘‘நீங்கள் அனைவரும் அங்கே பாருங்கள்’’ என்றார் குரு.

அங்கே ஒரே ஒரு சீடன் மட்டும் நாயின் நிலையைக் கண்டு அதிகம் உணர்ச்சிவசப்பட்டான். நாயை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். எப்படியாவது அதன் தாகத்தை தணித்துவிட வேண்டும் என்ற ஆவேசம் அவன் நடவடிக்கைகளில் தெரிந்தது.

திடீரென்று யோசனை வந்தவனாக, காட்டுக்கொடிகளைப் பறித்து இணைத்தான். இணைத்த கொடியில் தன் மேலாடையைக் கழற்றிக் கட்டினான். அதை அப்படியே கிணற்றில் தூக்கிப் போட்டான். கொடியை மேலே இழுத்து, நனைந்த ஆடையை எடுத்து நாயின் வாயருகே பிழிந்தான். நீர் பரவி நாயின் தாகம் அடங்கிற்று. நாய் எழுந்து சுறுசுறுப்பானது. நாய் வாலை ஆட்டிக் கொண்டு அவனோடு வந்தது.

‘‘நீங்கள் அனைவரும் நாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தீர்கள். ஆனால், அவன் நாயின் இடத்தில் தன்னை வைத்து அதன் தவிப்பைப் புரிந்து கொண்டான். அதனாலேயே அவனுக்கு தண்ணீரை எடுக்கும் யுத்தி தெரிந்தது’’ என்றார் குரு.

‘உயிர்களை மனதிலிருந்து நேசிக்க வேண்டும்’ என்பதைத் தெரிந்து கொண்ட சீடர்கள், குருவுக்கு நன்றி சொன்னார்கள்.

இன்றைய செய்திகள்

30.10.2023

*இன்று உலக சிக்கன நாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.

*10000 காய்ச்சல் முகாம்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

*இந்தியாவில் தெரிந்தது 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம். நேற்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2. 24 மணி வரை ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது.

*உலகக்கோப்பையில் முதன்முறையாக டக் அவுட் ஆன விராத் கோலி.

*உலகக் கோப்பை கிரிக்கெட்:  இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

* Today is World Austerity Day  M.K.  Greetings from Chief Minister M.K.Stalin.

 * 10000 fever camps Minister Ma.  Subramanian initiated.

 *The last lunar visible eclipse in India for 2023 was seen yesterday early morning. The lunar eclipse lasted for one hour and 19 minutes from 1.05 a.m. to 2.24 a.m.

 * Virat Kohli ducked out for the first time in the World Cup.

 *Cricket World Cup: The team India won the match against England by 100 runs.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment