Pages

Sunday, October 8, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2023

   

சே குவேரா



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

விளக்கம்:

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.



பழமொழி :

Discretion is better than valour

விவேகம் வீரத்தினும் சிறப்பு

இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

ஒவ்வொரு சிறுமியின் சிரிக்கும் முகமே கடவுளின் பிரசன்னத்தின் கையொப்பம்." - அமித் ரே

பொது அறிவு :

1. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை

English words & meanings :

 Novelty.    புதுமை
Orphan     அநாதை
Order.       ஒழுங்கு
Peahen   பெண்மயில்
Plait.       பின்னல்

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. 

அக்டோபர் 09

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதிகியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.


உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Dayஅக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.[1] அக்டோபர் 91874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 காக்கையின் அருமை


ஒரு மரத்தில் ஆண் காகமும்  பெண்காகமும. பறவைகளும்

வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று  தொலைவில்  உள்ள நகரத்துக்கு தன் குஞ்சுகளுடன் வந்து, கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்கு சென்றுவிடும். 

தினம் தினம் மனிதர்கள் போடும் மிச்சம் மீதி உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருவதை அந்த மரத்திலே வசிக்கும் மற்ற பறவைகள் கேலி செய்தன. எங்களை போல் காட்டுக்குள் சென்று உணவு உண்ணாமல் இருப்பது உன்னால் எங்களுக்குத்தான் கேவலம் என்றன.

காகம் அந்த பறவைகளிடம் நாங்கள் மக்களிடம் சென்று சாப்பிட்டு பிழைப்பதால் நகரத்தில் சுத்தம் ஏற்படுகிறது. ஒரு விதத்தில் நாங்கள் மனிதர்கள் வீசும் கழிவுகளை உண்பதால் நகரம் சுத்தமாக ஆகிறது ஆகவே நாங்கள் உழைத்துத்தான் சாப்பிடுகிறோம். அதுவும் அவர்களாக பார்த்து கொடுப்பதை நாங்கள் சாப்பிடுகிறோம் என சொல்லியது. மயில்,புறா,குருவி போன்றவைகள் காக்கைகளை கேலியும் கிண்டலும் செய்து கொண்டுதான் இருந்தன.

நீங்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறீர்கள் அதனால் தான் மனிதர்கள் உங்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்றும், காக்கைகளின் நீங்கள் மாமிசபட்சிணிகள், எங்களுடன் நீங்கள் வசிப்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றெல்லாம் பேசின.நிறத்தையும் கேலி செய்து பேசின.மேலும் இதை கேட்ட காக்கை குஞ்சுகள் மனம் வேதனைப்பட்டு தங்கள் பெற்றோரிடம் நாம் இங்கிருந்து போய் விடலாம் என்று சொல்லின.

ஆண் காகம் உடனே தன் குஞ்சுகளை பார்த்து, குழந்தைகளே மற்றவர்கள் பேசுவதற்கும்,ஏசுவதற்கும் பயப்பட்டு நாம் கூட்டைவிட்டு சென்றோம் என்றால் நம்மால் எங்கும் வசிக்க முடியாது. எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் அதனை அனுசரித்து பழகிக்கொண்டோம் என்றால் நம்மால் நன்றாக வாழமுடியும். ஆகவே யார் சொல்வதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய அருமை எல்லாம் மற்றவர்களுக்கு புரியும் போது சரியாகிவிடும் என்று அறிவுரை கூறியது. அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் கொஞ்ச நாட்களாக கவலையில் இருந்தன.

தங்களுக்குள் வருத்தப்பட்டு பேசிக்கொண்டன. இதை கவனித்த ஆண் காகமும்  பெண் காகமும் மயில்களிடம் சென்று கேட்டன.ஏன் கவலையாயிருக்கிறீர்கள்?   என்று .மயில்கள் சோகமுடன் நாங்கள் மனிதர்களின் விவசாய நிலத்தில் பயிராகும் கதிர்களை தின்று மரத்தில் வசிக்கிறோம். எங்கள் அனைவரையும் மனிதர்கள் எங்கள் மேல் கோபம் கொண்டு எங்களுக்கு மருந்து வைத்து அழிக்க முற்படுகிறார்கள்.அது மட்டுமல்ல இந்த வலை போட்டு பிடித்துச்செல்ல இன்று வருவதாக பேசிக்கொண்டிருந்தார்கள் என்று வருத்தத்துடன் சொன்னது. காகங்கள் கவலைப்படாதீர்கள் இந்த மரத்தில் வசிக்கும் உங்களை காக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன. இவர்களால் எப்படி எங்களை காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் மயில்கள் காகங்களை பார்த்தன.

இவைகள் பேசிக்கொண்டிருந்த மறு நாள் நான்கைந்து மனிதர்கள் மரத்தின் அருகில் வந்து நின்று மயில்களை எப்படி பிடிக்கலாம் என பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று அந்த மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான காகங்கள் கிளம்பி அந்த மனிதர்களை நோக்கி பறந்து வந்தன. வந்தவைகள் மனிதனின் தலை மேல் கொத்துவதற்கு பாய்ந்து வர அங்கிருந்த மனிதர்கள் ஐயோ, அம்மா, என்று கூக்குரலிட்டு பயந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டனர்.

ஒரு சில நாட்கள் கழித்து அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் காகங்களிடம் வந்து உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இந்த மரத்தில் வசிப்பதால் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மனிதர்கள் இந்த மரத்திற்கு அருகில் வந்தாலே நீங்கள் கொத்திவிடுவீர்கள் என பயப்படுகிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள் என்று ஆச்சர்யத்துடன் கேட்டன. காகங்கள், சிரித்தவாறு நாங்கள் பிழைப்புக்காக மனிதர்களை நாடினாலும்,எப்பொழுதும் எங்களுக்கிடையில் ஒற்றுமையாய் இருப்போம். ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அனைவரும் உதவிக்கு வந்து விடுவோம் என்று கூறியது.மயில்கள் மிக்க நன்றி கூறி விடைபெற்றன.

ஒரு நாள் குருவிகள் கீச், கீச், என்று கத்தியவாறு அலை பாய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று எட்டிப்பார்த்த காகம் அங்கு ஒரு பாம்பு குருவிக்கூட்டை நோக்கி போவதை பார்த்து தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்குத்தான் அவ்வாறு கத்துகிறது என்பதை புரிந்துகொண்டு ஆண் காகமும், பெண் காகமும் பாய்ந்து சென்று அந்த பாம்பை கொத்த ஆரம்பிக்க இவைகள் இருவரின் கொத்துதல்களை சமாளிக்க முடியாத பாம்பு விட்டால் போதும் என்று கீழே சர சர வென இறங்கி சென்றுவிட்டது.குருவிக்குஞ்சுகள் காக்கைகளிடம் வந்து மிக்க நன்றி சொல்லி அவர்களை கேலியும் கிண்டலும் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தன. ஒரு முறை ஒருவீட்டில் பெரிய விசேஷம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.அந்த விசேஷம் நடந்த வீட்டில் இருந்தவர்கள் ஒரு இலையில் நிறைய சாப்பாட்டை எடுத்து வந்து வீட்டிற்கு மேலே வைத்தனர். அப்பொழுது மேலே பறந்து கொண்டிருந்த பறவைகள் வாசத்தில் கவரப்பட்டு அந்த சாப்பாட்டை  சாப்பிடுவதற்கு கீழே இறங்கின. 

உடனே அந்த வீட்டில் இருந்தோர் அந்த பறவைகளை  சாப்பிட விடாமல் விரட்டினர்.அப்பொழுது அந்த இரு காக்கைகள் பறந்து வந்து அந்த சாப்பாட்டை கொத்த ஆரம்பித்தன. உடனே அந்த மனிதர்கள் கையெடுத்து கும்பிட்டனர். மற்ற பறவைகளுக்கு ஒரே ஆச்சர்யம்? நம்மை சாப்பிடவிடாமல் விரட்டிய மனிதர்கள் இவைகளை கும்பிடுகிறார்களே? என்று கேட்டன

காகங்களிடம், தங்களுடைய முன்னோர்களே அந்த சாப்பாட்டை சாப்பிடுவதாக் மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் கை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள் என்றன.இதை கேட்ட மற்ற பறவைகள் காகங்களின் அருமையை உணர்ந்து கொண்டன.தாங்கள் கேலி செய்து பேசியதற்கு மன்னிப்பு கூறின.

(பிறரின் தோற்றம் முக்கியமல்ல. அவர்களின் செயல்கள்தான்

நன்கு கவனிக்கப்படவேண்டும்)

இன்றைய செய்திகள்

09.10.2023

*இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: அக்டோபர் 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து.

* வெற்றிகரமாக பயணிக்கும் ஆதித்யா L-1:
இஸ்ரோ தகவல் 

*ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 2000 பேர் பலி 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு டெங்கு‌.  பாதிப்பு எண்ணிக்கை  81ஆக உயர்ந்துள்ளது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர் ,வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

* ஆசிய விளையாட்டு 2023: செஸ் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா.

Today's Headlines

*Israel-Hamas War Tension Echoes: Air India Flight Service Cancelled Till October 14

  * Aditya L-1 successfully travels:  ISRO information

  *A powerful earthquake in Afghanistan  2000 people died and completely destroyed 12 villages.

  * Four more dengue cases in Pudukottai district have increased to 81.

  * 107 medals in the Asian Games Chief Minister M K Stalin praises the Indian team.

  * Asian Games 2023: India won silver in chess.
 Prepared by

Covai women ICT_போதிமரம்







No comments:

Post a Comment