Pages

Tuesday, October 31, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023

 

மெஸ்ஸி 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம்:

உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.


பழமொழி :

Example is better than precept

சொல்வதை விட செய்வதே மேல்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி :

ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”

பொது அறிவு :


1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: இராமநாதபுரம் 

2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்?

விடை: கவிமணி 

English words & meanings :

nominate (v)- elect

ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: தொண்டையில் புண் ஏற்பட்டு  எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க  தொண்டை வலி குணமடையும்.

நீதிக்கதை

 ஒரு பள்ளி மாணவன் இருந்தான். நல்ல சுட்டி.. கொஞ்சம் மொரடு. அவனுக்கு எப்படியாச்சும் வகுப்பறையில் லீடராகனும்னு ஆசை. ஆனா ஸ்கூல்ல அவனை யாருக்குமே பிடிக்காது. பட்டு பட்டுனு கை நீட்டிருவான். சொல்லறத கேட்டு நடக்க மாட்டான். தனக்கு எல்லாமே தெரியும்னு இருப்பான். ஆனா வாத்தியார்களை கவர்வதுல கெட்டிக்காரன். அவன் நினைச்ச மாதிரியே வகுப்பறையில் லீடரும் ஆயிட்டான். இவன் சொல்றததான் யாருமே கேக்க மாட்டாங்களே. அதனால இவன யாருமே லீடரா ஏத்துக்கல. இவன் என்ன சொன்னாலும் பேசிகிட்டே இருந்தாங்க. ரொம்ப மனவேதனையோட அப்பாகிட்ட நடக்குறத சொல்லி அழுதான். அப்பாவோ, 'சரி சரி இதுக்கெல்லாம் அழலாமாடா?'னு சொன்னார். பிறகு, 'உனக்கு ஒன்னு சொல்றேன். மனசுல வெச்சு நடந்துக்கோ. எல்லாம் சரியா போயிரும்'னு ஒரு குறள் சொன்னாரு. 'கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவிணையும் மாண்ட தமைச்சு' நாம எவ்ளோ பெரிய தலைவரா இருந்தாலும எந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடியும் சுத்தி இருக்க எல்லாரையும் அவங்க சூழ்நிலையும் புரிஞ்சு எடுக்கணும். நாம மத்தவங்க நலனை மதிச்சு அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தா தான் மத்தவங்க நம்ம கருத்துக்கு மரியாதை கொடுத்து நம்மள தலைவரா ஏத்துப்பாங்க. மத்தவங்க நம்மள மதிச்சா தான் நாம

தலைவர். இல்லாட்டி நாம ஒண்ணுமில்லன்னு சொன்னாரு. அடுத்த நாள்ல

இருந்து எல்லார்கிட்டயும் அன்பா அவங்களை புரிஞ்சு மதிச்சு நடந்தான்.

இப்ப எல்லாரும் அவன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கேட்கிறாங்க.

இன்றைய செய்திகள்

01.11.2023

*மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் மர்ம நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதை பார்த்து பதட்டப்பட வேண்டாம். 1930 எண்ணில் புகார் அளிக்க மின்வாரியம் வேண்டுகோள்.

*இந்தியாவில் முதல் நவீன ரயில்; சென்னையில் தயாரிக்கப்படுகிறது. 

*தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு -
சென்னை மாநகராட்சி

*தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலோன் டி' ஓர் விருது. 8வது முறை வென்று சாதனை படைத்த மெஸ்சி.

Today's Headlines

* Some  mysterious people sending SMS like the electricity board.  No need to panic. Complain to   1930 EB requested the public .

 *First modern train in India;  Made in Chennai.

 *Monitoring by drone to prevent flooding in  low-lying areas.

 * Chance of rain in Tamil Nadu for the next 3 days: Meteorological Department of TN announced.

 * Ballon d'Or Award for the best football player in the world.  Messi won the record for the 8th time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

1 comment: