Pages

Thursday, June 15, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.23


வாடிகன் நகரம்


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

விளக்கம்:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

பழமொழி :

A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே . ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

பொது அறிவு :

1. உலகின் மிகச்சிறிய நாடு எது?

விடை: வாடிகன் நகரம்


உலகின் மிகப்பெரிய நாடு எது?

விடை: ரஷ்யா

English words & meanings :

 Affection - Love , Kind feeling அன்பு, கனிவு.

 Beacon - Light house கலங்கரை விளக்கம்

ஆரோக்ய வாழ்வு :

கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

நீதிக்கதை

1. அச்சம் கொள்ளாதே!

துடிதுடித்தவாறு அழுதுகொண்டே வந்தான் சிறுவன். தாய் அவனைக் கவனித்தாள்.

அவன் விரலில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

"என்னடா கண்ணே நடந்தது" என்று அன்னை பரிவோடு கேட்டாள்.

''அம்மா, முள் செடியிலே சின்னப் பழம் ஒன்று இருந்தது. அதைப் பறிப்பதற்காக முள் செடியைப் பயந்து பயந்துதான் தொட்டேன். ஆனால் முள் விரலில் குத்திவிட்டதும் இரத்தம் வந்துவிட்டது" என்று அழுது கொண்டே கூறினான் சிறுவன்.

"குழந்தாய், முள் செடியைப் பயந்து பயந்து தொட்டதனால்தான் விரலில் முள் குத்தி விட்டது. சற்றும் அஞ்சாமல் துணிச்சலாக ஆனால் லாவகமாக முள் செடியைப் பிடித்திருந்தால் முள் குத்தியிருக்காது. இது மட்டுமல்ல குழந்தாய்! நல்ல செயல்கள் எதைச் செய்ய நேர்ந்தாலும் தயக்கமோ. அச்சமோ கொள்ளாதே! துணிச்சலாகச் செயலில் ஈடுபடு. நிச்சயம் அந்தச் செயலில் வெற்றியடைவாய்" என்று அவனுக்கு உபதேசம் செய்தாள்.

இன்றைய செய்திகள்

16.06. 2023

*5 கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 

*கோவை -  கரூர் சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு ரூபாய் 400 கோடி ஒதுக்கியுள்ளது.

*நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. - அமைச்சர்                    மா. சுப்பிரமணியன் 
 
*தமிழ்நாட்டில் சராசரியை விட 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம். 

*ஆகஸ்ட் 31 முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது.

Today's Headlines

 * 5 Education department officials have been transferred by school education department .

 *The Union Government has allocated Rs 400 crore for the Coimbatore-Karur road widening project.

 *65,823 students who did not clear the NEET examination are being given mental health counseling.  - Minister Ma.  Subramanian
 
 *Tamil Nadu to see 2-4 degrees Celsius warmer than average - Meteorological Centre.

 *Asia Cup cricket tournament is going to start from August 31.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment