Pages

Wednesday, April 5, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.04.23

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ செல்வங்களும் நன்முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற போதிமரம் சார்பாக வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் : 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.   

பொருள்: 

நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும் .

பழமொழி :

Don't judge a book by its cover. 

புறத்தோற்றம் கண்டு மயங்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன்.

 2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதனால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

பொது அறிவு :

 சோடியத்தின் சிறப்பு என்ன ?

 இது தண்ணீரில் எரியும்.

English words & meanings :

 Newshawk -newspaper reporter, especially one who is energetic. noun. Mr. Sam is a great Newshawk. செய்தித் தாள்களுக்கு விறுவிறுப்பாகச் செய்தி சேகரிப்பவர். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில அறிகுறிகள் நமக்குத் தோன்றும்.

அதிகப்படியான சோர்வு,

உடல் அசௌகரியம்,

சருமம் வெளிறிப்போய் மஞ்சள் நிறமாக மாறதல்,

கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,

ஞாபகத்திறன் பிரச்சினை,

நடக்கும்போது, பேசும்போது தடுமாற்றங்கள் ஏற்படுவது

போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

கணினி யுகம்

Ctrl + (Plus) Key - With the use of these keys, you can adjust the widths of all columns automatically, in Windows Explorer. Alt + Enter - When you press these keys together it will open the properties tab for the icon or program you’ve chosen.


ஏப்ரல் 06




நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடிவிடும். காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்தது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேச வேண்டும் என தீர்மானம் போட்டது. 


சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையாடக் கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் எனக் கூறியதும், சிங்கமும் சரி என்றது. 


தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை, அது உணவாக சிங்கத்திடம் செல்ல வேண்டும். மிகுந்த கவலையுடன் சென்ற போது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜாவிடம் சென்றது. சிங்கராஜாவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது. 


சிங்கமும் காரணம் கேட்டது, அதற்கு முயல், சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன். அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று. அதற்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என கூறியது. 


இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது. முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது. முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது. முயலின் உட்பகையை அறிந்து கொள்ளாமல் அழிந்தது. 


நீதி :

உரிய இடத்தில் தந்திரத்தோடு செயல் பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.04. 2023

* தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

* இன்று முதல்
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணியும்,
வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியும் தொடக்கம்.

* பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு இன்று முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.

* கரோனா பாதிப்புக்கும் மாரடைப் புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

* பிஎல்ஐ திட்டத்தில் ட்ரோன் துறைக்கு ரூ.30 கோடி நிதியுதவி:  மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.

* அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது.

* ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.

* உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பற்றிய போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பி.வி. சிந்துவுக்கு 12-வது இடம்.

* சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண்- வரலாற்று சாதனை படைத்த கிம் காட்டன்.

Today's Headlines

* The health department has set a target for district administrations to conduct 11,000 covid tests daily in Tamil Nadu.

 * From today, the 9th phase of excavation work in the basement,
 2nd phase excavation work has also started at Vembakottai.

 * The Forest Department has announced that the Mudumalai Tiger Reserve will be closed from today to the 9th in view of Prime Minister Narendra Modi's visit and vehicle rides will be temporarily suspended.

 * Union Health Minister Mansukh Mandaviya has said that an expert committee has been set up to investigate whether there is a link between Corona virus and heart attacks.

 * Rs 30 crore funding for drone sector under PLI scheme: Union Ministry of Aviation Information.

 * Former US President Donald Trump arrested.

 * The Taliban have banned Afghan women   from working in the UN organization.  This has been confirmed by the United Nations.

 * In the Forbes magazine's list of the world's highest paid female athletes, P.V. sidhu placed at  12fth 

* Kim Cotton became the first woman to officiate as a field umpire in international men's T20 cricket - a historic achievement.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment