Pages

Wednesday, March 8, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

பழமொழி :

An old mans sayings are seldom untrue.

முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

முட்டாள்களின் மிகவும் கெட்ட குணமாக இருப்பது தன் குறையை மறந்து விட்டு பிறர் குறையை காண்பதே.

பொது அறிவு :

1. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது ? 

 புதுக்கோட்டை

 2. நமது உடலில் ஒரு நாள் பொட்டாசியத் தேவை எவ்வளவு ? 

 4 கிராம்.

English words & meanings :

Fenugreek - a plant it's seeds are used in Indian kitchen for flavours the food. noun.வெந்தயம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

சளி பிடிக்கும் போது தொண்டை வலியை ஈரப்படுத்தி தற்காலிக நிவாரணம் அளிக்க வாய் கொப்புளிப்பது நன்மை தரும். 8 அவுன்ஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கரைத்து தினமும் நான்கு முறை வாய் கொப்புளிக்கவும்.



நீதிக்கதை

வைத்திய செலவு

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. ஆனால் வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்டை அணுகினான். சேட்டும் பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய் என்று கேட்டான். 

என் உடல் நலம் தேறியதும், என்னுடைய உயர் ஜாதி அரேபியக் குதிரையை நல்ல விலைக்கு விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் சிகிச்சையை ஆரம்பித்தார். 

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. அதனால் சேட் தெனாலிராமனை சந்தித்தார். அவரிடம், உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே! இன்னும் தரவில்லையே என்றார். 

ஆனால் யோசித்த ராமன், அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என, சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா என்று அவரையும் அழைத்துக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டனர். 

போகும் போது குதிரையின் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் ஒருவன், தெனாலிராமனைப் பார்த்து உன் குதிரையின் விலை என்ன? என்றார். 

குதிரையின் விலை 1 பவுன்தான். ஆனால் இந்த பூனையின் விலை 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இந்த குதிரையைக் கொடுப்பேன் என்றார். அதன்பின் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றார். 

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தார். ஆனால் ஒரு பவுனை வாங்க மறுத்து விட்ட சேட். குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். என்றார். 

அதற்கு தெனாலிராமன் ஐயா குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம் என்றான். 

இறுதியில் இவர்கள் வழக்கு மன்னரிடம் சென்றது. மன்னர் இவ்வழக்கை நன்கு விசாரித்து. பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் வழங்கினார். 

நீதி :
அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இன்றைய செய்திகள்

09.03. 2023

* "வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமானநிலையமாக திருச்சி விமானநிலையம் தேர்வு: சர்வதேச விமானநிலைய கவுன்சில் அறிவிப்பு.

* பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்.

* தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.

* வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை.

Today's Headlines

Tamil Nadu Chief Minister M. K. Stalin has said that in the list of women taking loans for various business ventures in the categories of home - business - property, Tamil Nadu women are second and first in personal loans.

 * Trichy Airport selected as the best airport in Asia Pacific: Airports Council International announcement.

 * The central government signed an agreement with HAL, L&D for Rs 9,900 crore to buy training fighter jets and ships.

 * Surface-to-air missile test-fired successfully 

* 14 people died in an explosion in a 7-storey building in Dhaka, the capital of Bangladesh.  More than 100 people were injured.

 * Player of the Month Award for February: Indian player Jadeja had been nominated.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment