Pages

Tuesday, February 14, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.02.2023

  திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் : 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

பழமொழி :

A good example is the best sermon.

உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை. 

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.

பொது அறிவு :

1. படர்தாமரையை உருவாக்குவது எது?

 பூஞ்சைக் காளான்

 2. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 

பி .ஆர் .அம்பேத்கர்.

English words & meanings :

ant that is very big - giant

ஆரோக்ய வாழ்வு :

மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.

NMMS Q

இயற்கை வகைப்பாட்டு முறையில் தாவரங்கள் எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விடை :மூன்று

பிப்ரவரி 15

 கலிலியோ கலிலி அவர்களின் பிறந்தநாள்




கலீலியோ கலிலி (Galileo Galileiஇத்தாலிய ஒலிப்பில்கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564[3] – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர்கணிதவியலாளர்வானியல் வல்லுநர்பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை",[4] "நவீன இயற்பியலின் தந்தை",[5][6] "நவீன அறிவியலின் தந்தை"[7] என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

நீதிக்கதை

நான்கு பொம்மைகள்

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.

மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்

இன்றைய செய்திகள்

15.02.2023

* தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நகரங்களில் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் சேவை 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது: தமிழகம் நோக்கி வரும் புயல்களை கணிப்பதில் பேருதவி.

* வழக்கு காரணமாக 5 ஆண்டு களுக்கு மேல் முடங்கி இருந்த 118 திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

* சீனா, ஹாங்காங் உட்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ‘கோவிட்-19’ பரிசோதனை இனிமேல் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

* சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.

* ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது.

* பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி.

* ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு.

Today's Headlines

* The Tamil Nadu government has declared Chennai, Coimbatore, Trichy, Madurai, Salem and Tirunelveli as electric vehicle cities.  Accordingly, a target has been set to convert government buses and auto rickshaws in these cities to electric vehicles in the next 10 years.

* TNPSC has announced that the Group 4 exam results will be released in the month of March.

 * In Tamil Nadu, measures have been taken to provide cervical cancer vaccines to girls between the ages of 9 and 14 in schools and Anganwadi centers, health department officials said.

* Radar Service of Chennai Meteorological Center completes 50 years: Help in predicting storms approaching Tamil Nadu

 * The Supreme Court has given permission to 118 projects which were stalled for more than 5 years due to litigation.

* The Union Ministry of Health has announced that the 'Covid-19' test will no longer be mandatory for foreign travelers coming to India from 6 countries including China and Hong Kong.

* Saudi Arabia is set to send a female astronaut into space for the first time.

* The Asian Badminton Mixed Teams Championship started yesterday in Dubai.

 * Women's Cricket World Cup: South Africa beat New Zealand

 * India's Subman Gill named ICC Player of the Month for January
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment