Pages

Thursday, January 5, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2023

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: கூழியல்

அதிகாரம்: பொருள் செயல் வகை

குறள் எண் : 754

குறள்:
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பொருள்:
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.


பழமொழி :

Tomorrow never comes

கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது

இரண்டொழுக்க பண்புகள் :

1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.

2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

பொன்மொழி :

வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.___அம்பேத்கர்

பொது அறிவு :

1. கண்ணாடி சோப்பு என அழைக்கப்படுவது எது ? 

மாங்கனீசு

 2. லோகோமேனியா என்றால் என்ன? 

இயல்புக்கு அதிகமாகப் பேசுதல்.

English words & meanings :

gene - chromosome. a unit of heredity. noun. பரம்பரையாக வரும் மரபுப் பண்புக்குக் காரணமாக இருக்கும் உயிர்மம். பெயர்ச் சொல். jean - a type of fabric. noun. ஒரு வகையான துணி. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூ வேகவைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வர நீரிழிவுநோய் கட்டுப்படுத்தப்படும் .அஜீரணம் அகலும்.

NMMS Q

பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்: a) குண்டு வெடிப்பு b) எரிமலை வெடிப்பு c)நில அதிர்வு d)வறட்சி 

விடை: குண்டு வெடிப்பு விளக்கம்: எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வறட்சி முதலியன இயற்கை பேரிடர்கள் ஆகும். குண்டுவெடிப்பு மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் ஆகும்.

ஜனவரி 06


கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்





கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959)[1] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 



கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்






கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை

யானையின் திறமை

ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது. யானை முதலில் மரத்தில் ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய். அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது என்று குரங்கு சொன்னது.

அடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது என்று சொன்னது. அடுத்ததாக யானை, தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாயா என்று கேட்டது. அதற்கு தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.

கடைசியாக யானை, நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய். ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது. யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.

அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது. அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு வருகிறது. அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.

யானை இதற்கு ஒரு வழி கொண்டு வரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி, இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று சொன்னது. யானை அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது. காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.

இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.

இன்றைய செய்திகள்

06.01.2023

* தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.20 கோடி: பட்டியலை வெளியிட்டார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.

* பபாசியின் 46-வது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் ரூ.15,610 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* முதுமலை வனப்பகுதிகளில் காட்டுப்‌ பன்‌றிகளுக்கு பரவும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்.

* நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.

* சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில்,ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

* கரோனாவின் உண்மையான பாதிப்பை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

* பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: நிதி இல்லாமல் அரசு துறைகள் மற்றும் ரயில்வே தவிப்பு.

* பிரிட்டனில் உள்ள அனைத்து மாணவர்களும் 18 வயது நிரம்பும் வரை கணிதத்தை ஒரு பிரிவாக படிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

* ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டி காலண்டரை வெளியிட்டு உள்ளது.

* 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலாவில் வருகிற 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க உள்ளது.

* மராட்டிய ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Total number of voters in Tamil Nadu is 6.20 crore: Chief Electoral Officer of Tamil Nadu Sathyaprada Sahu released the list.

 * Chief Minister M. K. Stalin will inaugurate Babasi's 46th Book Fair at Nandanam YMCA ground in Chennai today. For the first time, a thousand stalls have been set up at the fair.

 * Minister Thangam Thennarasu has said that the Cabinet has approved 8 new industrial investments worth Rs.15,610 crore in Tamil Nadu.

 * African swine fever spread to wild boars in Mudumalai Forests.

 * Siva Chauhan, a woman officer, has become the first woman army officer to be posted on the Siachen Glacier, one of the highest snow peaks in the country.

 * The union cabinet has approved Rs. 19,744 crore for National Green Hydrogen Project. This project is aimed at maing India a hub for Global Clean Energy Producer

 * The World Health Organization has accused China of understating the true impact of the coronavirus.

 * Pakistan in Great Economic Crisis: State Departments Without Funds and Railways Suffering

 * British Prime Minister Rishi Sunak has announced plans to make all students in Britain study maths as a subject by the time they turn 18.

*  The Asian Cricket Council has released the cricket tournament calendar for the next two years.

* The 15th edition of the World Cup will be held from 13th to 29th in Bhubaneswar and Rourkela in Odisha.

* Maratha Open Tennis: Marin Cilic advances to quarter-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

2 comments:

  1. 06/01/2023 இன்று கிரிகெர்மெண்டல் அவர்களின் நினைவு நாள்.தொகுப்பு மிக அருமை.நன்றி.

    ReplyDelete