Pages

Tuesday, January 3, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: இனியவை கூறல்

குறள் : 98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்:
பிறர்க்கு துன்பம் தராத
இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

பழமொழி :

Constant change is a sign of progress.

தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.

2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

பொன்மொழி :

என் உள்ளுணர்வு என்னை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாது, அதற்குச் செவிசாய்க்காத போது தோல்வியடைவது நான்தான். --ஹஸ்ரத் இனாயத் கான்

பொது அறிவு :

1. நாலடியார் என்ற நூலைத் தொகுத்தவர்கள் யார்? 

 சமண முனிவர்கள். 

 2. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுவது? 

 ங்க காலம்.

English words & meanings :

flour - powdered grain.noun. மாவு. பெயர்ச் சொல். flower - reproductive part of the plant.noun. மலர்
. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

NMMS Q

ஒரு நாட்டில் எந்தவித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும் பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர்_________ எனப்படுகிறார்.

 விடை: இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்

ஜனவரி 04 



Monday, January 3,


ஜனவரி 04


லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்



லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.


உலக பிரெயில் நாள்




புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.


நீதிக்கதை

ரூபாய் நோட்டு

ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.

மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இன்றைய செய்திகள்

04.01.2023

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

* போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.

* பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்: ஜனவரி 9 முதல் பொருட்கள் விநியோகம்.

* தமிழக வணிக வரித்துறையில் உதவியாளர்களாக பணியாற்றும் 1,000 பேருக்கு துணை மாநில வரி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் தந்துள்ளது.

* கரோனா ஆபத்து அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

* சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின் தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை உருவாக்கி வருகிறது. அந்த மென்பொருளுக்கு "சீடோஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.

* அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைக்கிறது - கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா கொந்தளிப்பு.

* அகிலேஷ் தாஸ் குப்தா மெமோரியல் அகில இந்திய சீனியர் தரவரிசை பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி தங்கப் பதக்கம் வென்றார்.

* இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது.


Today's Headlines

Higher Education Minister Ponmudi has said that the certificate verification process will be held from today to fill the vacant 1,895 honorary lecturer posts in government arts and science colleges in Tamil Nadu.

 Anti-narcotics drive: Chief Minister Stalin advises intensive raids on drug shops.

 Pongal Gift Package Token Issue started: Distribution of goods from 9th January.

 The government has approved the promotion of 1,000 assistants in the Tamil Nadu Commercial Tax Department as Deputy State Tax Officers.

 RT-PCR test is mandatory for passengers coming to India from 6 countries where the risk of corona is high - China, South Korea, Japan, Thailand, Hong Kong and Singapore.

 The enforcement department is developing a new software for easy access to the informations of investigating agencies, including the CBI.  The software is named "Seedos".

 Countries like USA, France are targeting only our domestic travelers - China is in turmoil over Corona restrictions.

 Rithvik Sanjeevi of Tamil Nadu won the gold medal in men's category at the Akhilesh Das Gupta Memorial All India Senior Ranking Badminton Tournament.

 The Senior Selection Committee of the Indian Cricket Board has announced that fast bowler Bumrah has been included in the Indian cricket team for the ODI series against Sri Lanka.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment