Pages

Tuesday, November 29, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

பழமொழி :

Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். --சாணக்யா

பொது அறிவு :

1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ? 

 ரோடன்ஷியா ஸ்குயிரஸ். 

 2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ? 

 வெனம்.

English words & meanings :

capital - chief City. noun. தலை நகரம். பெயர்ச் சொல். Capitol - a place where legislatives meet. noun. அரசு ஆள்பவர்கள் ஆலோசனை மண்டபம் 

ஆரோக்ய வாழ்வு :

குளிர்காலத்தில் பசி எடுக்கும் போது, கொய்யா ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பழமாக கொய்யா உள்ளது. நாளின் நடுப்பகுதியில் உங்கள் சர்க்கரை பசியை தணிக்கிறது, மேலும் பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்ற சில பருப்புகளுடன் சேர்த்து சாப்பிட்டால், அது உண்மையிலேயே ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர்கால காய்ச்சலை தடுக்க உதவுகிறது.

NMMS Q

If "all the child are men" மற்றும் "All the men are women" எனில்: a) all the men are child. b) all the women are child. c) all the women are men. d) all the child are women

விடை: all the child are women

நவம்பர் 30


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்... 









சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்

ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 

நீதி :
உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

30.11.22

சென்னை - மெரினா கடற்கரையில் விரைவில் இலவச வைஃபை சேவை.

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 7.57 லட்சம் பேர் பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.


புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்.

மின்சாரத்தில் இயங்கும் முதல்பந்தய காரை சென்னை ஐஐடிமாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்,பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

ஹாக்கி லீக் போட்டியில் எச்.வி.எப். அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி.

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.

Today's Headlines

CHENNAI - Free Wi-Fi soon at Marina Beach.

 The Government of Tamil Nadu has announced that you can apply online to benefit under the Special Scholarship Scheme for Sportspersons.

 17 lakh people have submitted petitions in the 4-day special voter camp across Tamil Nadu. Out of this 7.57 lakh people have applied for inclusion of names.


 Newly constructed colleges to open next academic year: Minister Ponmudi informs.

 IIT Chennai students have introduced the first race car that runs on electricity.

 Housing Minister Muthusamy has said that the Tamil Nadu Housing Board has decided to sell 8,000 houses that have not been sold for many years at a low price.

 The Supreme Court has categorically stated that collegium practice is the law of the land and the central government should follow it.

 People are holding protests against the general shutdown in various cities of China. As the protest spreads to various cities, the Chinese government is in crisis. Due to this, Corona restrictions are being relaxed in China.

 HVF won the Hockey League  

 Football World Cup: Portugal beat Uruguay to advance to the 2nd round.

 Australia-West Indies first test match starts today.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment