Pages

Monday, November 14, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2022

 திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

விளக்கம்:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே

பழமொழி :

Anybody can make history.

எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 

பொன்மொழி :

நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். --ஜே. ஆர். ஆர். டோல்கீன்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர் ? 

ரீட்டா பிரியா . 

 2. இதயத்துடிப்பை செய்யும் வேதிப்பொருள் எது ? 

 அசிட்டில் சோலைன்.


English words & meanings :

Ho-mo-ny-ms - same words sound or spell alike but with different meanings. Noun. ஓரினச் சொற்கள்

ஆரோக்ய வாழ்வு :

நாவல் பழ விதைகளில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

NMMS Q

சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த ஆட்சியாளர் யார்? 

விடை: தேவராயர்

நவம்பர் 15


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்

கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

சானியா மிர்சா அவர்களின் பிறந்தநாள்




சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்

நீதிக்கதை


முரட்டு ஆடு

ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. 

அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். 

ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது. 

முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது. 

மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. 

நீதி :
தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.

இன்றைய செய்திகள்

15.11.22

* அழகன்குளம் 7 கட்ட அகழாய்வு: அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தமிழக கனமழை பாதிப்பு: முகாம்களில் 52,751 பேர் தங்க வைப்பு; 24 மாவட்டங்களில் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்.

* தமிழில் மருத்துவப் படிப்புக்கு இதுவரை 7 பாடப் புத்தகங்கள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

* கூகுள் டூடுல் இந்தியா 2022 விருதை வென்ற கொல்கத்தா சிறுவன்: குவியும் பாராட்டு.

* மணிப்பூரில் 300 ஏக்கர் தரிசு நிலம் 20 ஆண்டுகளில் வனப்பகுதியாக மாற்றம்: சென்னையில் படித்தவர் சாதனை.

* தேசிய விளையாட்டு விருதுகள்: டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிப்பு.

* ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி வெற்றி வாகை சூடியது.

Today's Headlines

*  In Azhakankulam 7 tier excavations:high Court demands the detailed report.

* Due to heavy rains in TN 52,751 people are made to stay in camps. In 24 districts 45,826 Hectare paddy crops are damaged

* To study medicine in Tamil 7 medical books are prepared in tamil information by Minister Ma. Subramaniam

* In Google doodle a Calcutta boy won the India 2022 award. Applause and praise piled up. 

* 300 acres of barren land in Manipur converted into forest in 20 years: Chennai-educated feat.

* National Sports Awards: Major Dayan Chand Khel Ratna Award Announcement for Table Tennis Player Sarath Kamal.

* The Swiss women's team won the Billie Jean Cup tennis series held in Scotland.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment