Pages

Sunday, October 30, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

பழமொழி :

A double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்.

பொது அறிவு :

1.காமராஜர் எப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்? 

1963ஆம் ஆண்டு. 

2. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 

ஆறுகள்.

English words & meanings :

Neo-na-to-lo-gy - study of new born babies. Noun. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ அறிவியல்.

ஆரோக்ய வாழ்வு :

பொதுவாக இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அந்த இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.

NMMS Q :

12 பசுக்கள் ஒரு புல்தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ______________நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. விடை: 6 நாள்கள். 

விளக்கம்: 12 x 10 = 20 x Y; Y = (12 x 10)/20 = 6 நாள்கள்

அக்டோபர் 31


இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்





இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.
பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.


நீதிக்கதை

கிணற்றில் விழுந்த நரி

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது. 

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

இன்றைய செய்திகள்

31.10.22

* தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 குழுக்கள் கண்காணிப்பு.

* உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல்.

* சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

* சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

* சர்வதேச ஜூனியர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 

Today's Headlines

* Chennai Metrology Department predicted mild rain in 20 districts of TN
In reflection of bird flu in Kerala 45 teams are formed in Namakkal

* In order to regularise the commercial shopping complexes and shops allotment by Local bodies a guidance team is set under the leader ship of internal affairs Secretary. 

* To execute common civil law Gujrat approved the formation of a team for the purpose. 

* In the capital of Somalia there is an explosion. More than 100 people were killed. 

* The Indians who wanted to work as Engineers in South Arabia should get the approval certificate AICTE implies and stresses this point. 

* In World Cup Junior Badminton TN player qualified for the finals. 

* In National Volleyball league TN women's team won the match. 

* In international Junior hockey match India won by defeated Australian team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment