Pages

Thursday, September 15, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2022

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவச்சம்

குறள் : 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்:
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

பழமொழி :

Little strokes fell great oaks.

சிற்றுளியால் மலையும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 

2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.           

பொது அறிவு :

1.உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது ? 

ரேடியம். 

2. இரத்தத்தில் பி எச் மதிப்பு எவ்வளவு? 

7.4.

English words & meanings :

neu·ro·sci·ence - science that deals with the nervous system, noun. My cousin is an expert in neuroscience. நரம்பியல். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

NMMS Q 61:

4*3 = 161279 , 5*6 = 25301136 , எனில் 3* 6 = _____________. 

விடை : 918936

செப்டம்பர் 16


ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்




ஒமர் முக்தார் (Omar Mukhtar1858 - செப்டம்பர் 161931மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.


கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்





கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்


சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons - CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி, ஓசோன் படலத்தை நாசம் செய்யும் வேதிப்பொருட்களுக்கு எதிரான ஐ.நா. மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அந்த நாளே 1995-ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

அல்ட்ராமேன் சைக்கிள்

ஜன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களை திறந்தான். ஜன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது. தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது.

எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிளில்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும். அந்தச் சைக்கிளின் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும் வரை அடங்காது. இரவில் அவன் படுத்து உறங்கியதும் முகிலனின் அப்பா அவனது சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்து விடுவார்.

முகிலன் வீட்டுக்கு வெளியே யோசனையுடன் வந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனது நண்பனின் சங்கிலி அறுந்த ஒரு பழைய சைக்கிள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. அதனால் அவன் வீட்டுக்குப் போனான். அவனுடைய அம்மா தூரத்திலேயே முகிலனைத் திட்டத் தொடங்கினார்.

தம்பி அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தான். தம்பியைத் தூக்கி சைக்கிளின் இடைக் கம்பியில் உட்கார வைத்தான். பின்னர் முகிலன் சைக்கிளில் ஏறி கால்கள் இரண்டையும் தரையில் வைத்துச் சைக்கிளைத் தள்ளினான். தம்பியின் அழுகை நின்றது. சங்கிலி இல்லாத அந்த அல்ட்ராமேன் 

இன்றைய செய்திகள்

16.09.22

# தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

# தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க இந்த ஆண்டு முதல்புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

# மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு செப்டம்பர்-21 முதல் இலவச பயிற்சி தொடக்கம்: பட்டதாரிகள் முன்பதிவு செய்து வகுப்பில் பங்கேற்கலாம்.

# தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

# தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகள் உட்பட பல்வேறு விதமான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட உள்ளது.

# பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

# பெண்கள் டி20 கிரிக்கெட்: ஸ்ம்ரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனை.

# சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான தடகள போட்டி: பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.

# சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கால் இறுதிக்கு தகுதி.

Today's Headlines

# The Tamil Nadu Health Department has issued guidelines regarding the H1N1 influenza virus spreading rapidly across Tamil Nadu.

 # Director of Medical Education Narayanababu said that a new procedure has been introduced this year to prevent private medical colleges from charging too much.

 # Free Coaching Starts for Central Staff Examinations from September-21: Graduates can book and participate in the class.

 # Tamil Nadu is likely to receive rain at one or two places for the first 4 days: Chennai Meteorological Department.

#  34 new drugs have been included in the National Essential Medicines List.  Through this, the cost of life-saving various medicines including anti-cancer and immune-boosting drugs will be reduced.

#  The Union Cabinet has approved including communities including Narikukarvar, kuruvikarar in the list of tribals.

#  Women's T20 Cricket: Smriti Mandhana- Shabali Verma pair new record.

 # Athletic competition for students on behalf of the school education department in Salem: Education department officials informed that various competitions are going to be held.

 # Chennai Open Women's Tennis- Indian pair qualify for quarterfinals in doubles.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment