Pages

Thursday, August 11, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1025

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

பொருள்:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

பழமொழி :

Don't use a lot where a little will do. 

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.

பொன்மொழி :

உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1.ஐநா சபை எந்த ஆண்டு தொடங்கியது ?

 1945

 2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் எது?

 ஜூலை 21 ,1969.

English words & meanings :

Quiz-zi-cal - asking a question through expression not with words. Adjective. ஒன்றை வினவுவதைப் போலக் காணப்படுகின்ற. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

கறிவேப்பிலை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் காணப்படும் ப்ளவனாய்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

NMMS Q 40:


கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில் எது?

 விடை: ஹசரா ராமசாமி கோயில் 

ஆகஸ்ட்  12


விக்கிரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்



விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhaiஆகஸ்ட் 121919 – டிசம்பர் 301971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்



உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய நூலக தினம். 



ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.

நீதிக்கதை

ஒரு வியாபாரியின் கதை

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. 

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். 

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினாலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். 

பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல். 

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். 

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய செய்திகள்

12.08.22

* போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - பெற்றோர், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.

* 75-வது சுதந்திர தினம்: சென்னையில் களைகட்டிய இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி.

* சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநராக பேராசிரியர் விஜயலட்சுமி நியமனம்.

* மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்ந்தளிப்புத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

* 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார்பிவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி.

* தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது.

* மாநில ஜூனியர் தடகள போட்டி:
கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்க உள்ளது.

* கனடா ஓபன் டென்னிஸ்: சானியா- மேடிசன் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

* முதல் டி20 போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி.

Today's Headlines

* Drug-free Tamil Nadu - CM Stalin's appeal to parents, teachers

 * 75th Independence Day: Day 2 Rehearsal in Chennai

 * Appointment of the first woman director of the Department of Legal Education Prof. Vijayalakshmi.

 * 4,758 crores have been released to Tamil Nadu from the central government's tax distribution amount to the states.

 * Central government approves Carbivax booster vaccine for everyone above 18.

  *China has said it has ended military drills on its border with Taiwan and is planning regular patrols.

 * State Junior Athletics Tournament will be held for 4 days in S.T.A.D  Krishnagiri stadium from 17th to 20th.

 * Canada Open Tennis: Sania-Madison advance to quarterfinals

*  First T20: New Zealand beat West Indies to win.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம் 

No comments:

Post a Comment