Pages

Thursday, August 4, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2022

     திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நாண் உடைமை

குறள் : 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

பொருள்:
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

பழமொழி :

Feed by measure and defy the physician.

அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

-சிசரோ

பொது அறிவு :

1. ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது ? 

என்சைம் . 

2. கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு எது? 

ஆப்டிக் நரம்பு.

English words & meanings :

mar·quee - a large tent with open sides, noun, exceptionally popular, adj, சர்க்கஸ் முதலானவை நடத்த உதவும் பெரிய கூடாரம். பெயர்ச் சொல். மிகவும் பிரபலமான, பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

ஆரஞ்சு மற்றும் லெமன் போன்ற பழங்களில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது. கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது. இது திசு சேதத்தை தடுக்கிறது. இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

NMMS Q 40:

ஏறுவரிசையில் அமைக்க: -5, 0, 2, 4, -6, 10, -10. 

விடை: -10< -6 <-5 <0 <2 <4 <10

ஆகஸ்ட்  05


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்




நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrongநீல் ஆம்ஸ்ட்ரோங்ஆகத்து 51930 – ஆகத்து 252012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

தைரியம்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.

திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.

ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

இன்றைய செய்திகள்

05.08.22

⛰தமிழகத்தில் நடப்பு ஆண்டு பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⛰கனமழை எச்சரிக்கை: மீட்புக் குழுக்கள், முகாம்களை தயார் நிலையில் வைத்திட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

⛰கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

⛰தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்: முதல்வர் பெருமிதம்.

⛰இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.

⛰முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திரும்பித்தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

⛰தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆவேசத்துடன் ராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

⛰காமன்வெல்த்தின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

⛰உலக ஜூனியர் தடகளத்தில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

⛰காமன்வெல்த் போட்டி - ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

Today's Headlines

The Government of Tamil Nadu has issued a sum of Rs 2,057.25 crore to implement the current year crop insurance scheme in Tamil Nadu.

⛰Heavy Rain Warning: Chief Minister Stalin's instruction for collectors to prepare the rescue groups and camps.

⛰Heavy rains are expected in Coimbatore and Nilgiris today, the Chennai Meteorological Department said.

⛰Ramsar recognition for 6 more wetlands in Tamil Nadu: CM proud.

⛰Kotagiri Longwood Solai has become internationally popular with the UK king's Green Shypper (Queen's Kanobi) award.

The UGC has ordered that if the first-year students leave the college by 31st October, the administration should refund the full fees to them.


⛰China, eagerly carrying out military training in the seas around Taiwan, has caused tension.

⛰India's Tejaswin Shankar won the bronze medal in the Commonwealth's men's height jump.

⛰India won the silver medal in a mixed series in the World Junior Athletics.

Commonwealth Games - in a single day India won 5 medals and progressed to 7th place in medallist.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment