Pages

Monday, July 18, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2022

  திருக்குறள் :

குறள் எண் – 986

பால் – பொருட்பால்

இயல் – குடியியல்

அதிகாரம் – சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.


விளக்கம்:

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

பழமொழி :

Tomorrow never comes

கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

-ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது? 

பிட்யூட்டரி . 

2.மூக்கில் பல் உள்ள விலங்கு எது? 

முதலை.

English words & meanings :

Yammer - one who talks foolishly and loudly. Noun. அர்த்தம் இல்லாமல் சத்தமாக பேசுபவர். பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா சங்க் (மீல் மேக்கர்), நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு பசியையும் கட்டுப்படுத்தச் செய்கிறது. இதனால் அடிக்கடி சாப்பிடும் ஆர்வம் குறையும்.

இதனால் மெட்டபாலிசத்தின் வேகமும் அதிகரித்து உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.




NMMS Q 27:

கோழிகளுக்கு பூஞ்சையினால் உருவாகும் நோய் எது? 

விடை: ஆஸ்பர்ஜில்லஸ்

நீதிக்கதை

ஆந்தை பெற்ற சாபம்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. 

நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். 

ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர். 

அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. 

அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. 

நீதி :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

இன்றைய செய்திகள்

19.07.22

 🔼நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

🔼ஒகேனக்கல்லில் 3-வது நாளாக காவிரியில் 1.20 லட்சம் கனஅடியாக தொடரும் நீர்வரத்து: பயணிகளுக்கு தடை நீடிப்பு.

🔼தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.

🔼18 மாதங்களில் மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் மோடி பெருமிதம்.

🔼நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🔼மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

🔼உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்.

🔼மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி - சீர்காழி அணி வெற்றி.


Today's Headlines

🔼The Ministry of Health and Human Welfare launched the counseling of NEET candidates through mental health counselors.

🔼 Cauvery continues to flow at 1.20 lakh cubic feet for the 3rd day at Okanagan: Prohibition for travelers extended.

 🔼Polling for the Presidential election in Tamil Nadu is over.

🔼 200 crore doses of vaccine administered to people in 18 months: PM Modi boasts of unprecedented speed

🔼The Monsoon session of Parliament started yesterday.  The central government is planning to table 24 bills.

🔼 Iran has accused the US of trying again to create tension in the Middle East.

 🔼Shooting World Cup: Bronze Medal for India

 🔼State Level Beach Volleyball Tournament - Sirkazhi Team Wins.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment