Pages

Wednesday, June 22, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடிமை

குறள் : 960

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

பொருள்:
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்

பழமொழி :

A rolling stone gathers no moss.

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 

2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்

பொன்மொழி :

நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெரும் செல்வம் நாம் வீணாக கழிக்கும் ஒவ்வாரு விநாடியும் தான் - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு :

1.சிகப்பு இரத்த அணுக்கள் குறைவதால் உண்டாகும் நோய் எது? 

அனிமியா.

 2. மனித ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்க எது காரணம்? 

ஹீமோகுளோபின்.

English words & meanings :

Harpoon-a long sharp-pointed weapon used to catch large sea animals. Noun. கடலில் வாழும் பெரிய உயிரினங்களை பிடிக்க உதவும் நீண்ட கூர்மையான கருவி. பெயர்ச்சொல் 

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் எ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் ஆரோக்கியத்தை மேப்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

கணினி யுகம் :

ABC என்பது 262524 எனவும், XYZ என்பது 321 எனவும் குறியிடப்பட்டால் PQR என்பது _________ 

 விடை: 11109

ஜூன் 23


கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்




கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

எறும்பின் தன்னம்பிக்கை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 

அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

இன்றைய செய்திகள்

23.06.22

★பொறியியல் ,கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

★கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

★மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருவதால் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

★மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

★காஷ்மீர்: கனமழை நிலச்சரிவால் போக்குவரத்து முடக்கம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.

★ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.

★உக்ரைன் அகதி குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை ஏலம் விட்டு ரூ.808 கோடி வழங்கிய ரஷ்ய பத்திரிகையாளர்.

★புரோ ஆக்கி லீக்: முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவை வென்றது இந்தியா.

★ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Today's Headlines

★ The date for applying for Engineering, Arts, Science, and Polytechnic courses will be extended for the next 5 days after the release of CBSE results, Higher Education Minister Ponmudi said.

 ★ Minister E V Velu has7 instructed the Public Works Department officials to inspect all the buildings of the Department of Education and demolish them according to the stability of the buildings.

 ★ The Government of Tamil Nadu has filed a reply in the High Court saying that there is no need to implement the National Education Policy as Tamil Nadu has been moving forward 15 years in India in terms of enrollment and education.

 ★ Minister Mr. M. Subramaniam said that more than 4,000 vacancies, including 1,021 vacancies in the medical field, will be filled by next September.

 ★ Kashmir: Traffic freeze due to heavy rains landslides, and floods in rivers.

 ★ The death toll from a powerful earthquake in Afghanistan has risen to 1,000 so far.

 ★ Russian journalist donates Rs 808 crore to Nobel Prize auction to help Ukrainian refugee children

 ★ Pro Hockey League: India beat the US in the first match.

 ★ 4th ODI against Australia - Sri Lanka defeated Australia and won the series.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment