Pages

Monday, June 13, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.06.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:நட்பியல்

அதிகாரம்: மருந்து

குறள் : 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

பொருள்:
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

பழமொழி :

Little brooks make great rivers.


நாலாறு கூடினால் பாலாறு


இரண்டொழுக்க பண்புகள் :

1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.

2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.

பொன்மொழி :

உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி.....இறையன்பு IAS

பொது அறிவு :

1.கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு எது? 

இதயம். 

2. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? 

33 ஆண்டுகள்.

English words & meanings :

Barn - a large building on a farm in which crops are kept. noun. தானிய களஞ்சியம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும். கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி  குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக்  குணப்படுத்தும். 


NMMS  SCIENCE - Q 2

எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன?

7 அலகுகள்.

How many fundamental units are there?

There are seven fundamental or basic units.

ஜூன் 14


சே குவேரா அவர்களின் பிறந்தநாள்





சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதிகியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார்.[9] பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

உலக குருதிக் கொடையாளர் நாள்

உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.

நீதிக்கதை

ஒரு வியாபாரியின் கதை

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. 

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். 

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினாலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். 

பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல். 

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். 

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய செய்திகள்

14.06.22

☀️ கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க 1 முதல் 3 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்.

☀️தமிழில் 300 சட்ட நூல்களை வெளியிட்ட மதுரை நூல் மையம்: 20 ஆண்டு கால முயற்சியால் சாதனை.

☀️மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

☀️தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

☀️கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

☀️இந்தியாவின் மின் தேவை நடப்பு ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. தினசரி மின் தேவை கூடுதலாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெகாவாட் வரையில் அதிகரித்துள்ளது என்று மத்திய மின் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

☀️அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக மக்கள் பேரணி.

☀️உலக இளையோர் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்.

☀️தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி முதலிடம்.

☀️லிபெமா ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நெதர்லாந்து வீரர் டிம் வேன்.

Today's Headlines

☀️"Ennun Ezhuthum" Program for students from 1 to 3 to reduce the learning gap that occurred during the Corona period: The Chief Minister launched.

☀️Madurai Book Center to publish 300 law books in Tamil: 20 years of effort.

☀️Chief Minister Stalin has written to Prime Minister Modi that the Cauvery Management Commission should not make any debate on Magadha.

☀️The Meteorological Department said that rainfall is likely in Tamil Nadu for the next 4 days.

☀️As the Corona epidemic is on the rise, the Union Health Minister Mansukh Mandaviya has consulted with all state health ministers.

☀️ India's electricity demand has hit the peak in the current year. The demand for daily power has increased from 40 thousand to 45 thousand MW, Union Power Minister RK Singh said.

☀️People's rally against gun violence in the United States.

☀️ World Youth Weightlifting: 2 Silver Medal for India.

 ☀️International Senior Athletics: Kanimozhi tops the 100 -meter ban.

☀️Lipema Open Tennis: Daniel Medwadeva defeated Netherlands player Tim Van.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment