Pages

Wednesday, May 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.05.22

 திருக்குறள் :

அதிகாரம்: அடக்கம் உடைமை

திருக்குறள்:124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

பழமொழி :

Like a bull in a China shop.

வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல

இரண்டொழுக்க பண்புகள் :

1. உடல் வருத்தாமல் வந்த பொருள் நெடுநாள் நிலைக்காது. உடல் வருத்தியே பொருள் பெற்றுக் கொள்வேன். 

2. நேர்மையான முறையில் வந்த பொருள் கொஞ்சம் என்றாலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும். நேர்மையான முறையிலே எல்லா பொருளும் பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்! தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான் - சிம்மன்ஸ்

பொது அறிவு :

1. இந்தியாவின் கோயில் நகரம் எது? 

புவனேஸ்வர்.

 2. நாம் கண்ணை மூடிக்கொண்டால் தெரியும் நிறம் எது? 

சாம்பல் நிறம்.

English words & meanings :

Waffle - a flat cake eaten with sugar syrup, இனிப்பு பாகுடன் உண்ணப்படும் தட்டையான கேக், 

Waffle - lot of words without much meaning, வெறுஞ்சொல் மயமான மொழி

ஆரோக்ய வாழ்வு :

கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தவிடு நீக்கப்படாத கோதுமையை உணவாகக் சாப்பிடுபவர்களுக்கு செலினியத்தில் அதிகம் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் உடலில் உள்வாங்கப்பட்டுதோலை தளர்ந்து விடாமல் தடுத்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் செய்து இளமையான தோற்றத்தை தருகிறது.நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற உணவில் சரிவிகிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வைட்டமின் பி சத்து தினந்தோறும் சாப்பிடும் உணவில் இடம் பெற வேண்டும். கோதுமையில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, இந்த வைட்டமின் பி சத்து அதிகம் கிடைத்து நாள் முழுவதும் உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படாமல் காக்கிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கவும் உதவுகிறது.

கணினி யுகம் :

Ctrl + Shift + F - Change the font. 

Ctrl + Backspace - Delete the word to the left of the cursor.

மே 05


மே – 5 சர்வதேச மருத்துவச்சி நாள் (International Midwives Day)

மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர்தாய் சேய் செவிலிபேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவுதிறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

கார்ல் மார்க்சு



கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 51818செருமனிமார்ச் 141883இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

நீதிக்கதை

 தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார். 

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர். 

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள்

05.05.22

💫1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வின் போது மட்டும் வருகை தந்தால் போதும் மற்ற நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை. கல்வி அமைச்சர் அறிவிப்பு.

💫இ-சேவை மைய வலைதளத்தில் கூடுதல் சேவைகள்: தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 13 முக்கிய அறிவிப்புகள்.

💫ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகம் 'இ-அலுவலகமாக' மாறும்: ஐடி துறை தகவல்.

💫கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

💫கடந்த மார்ச் மாதத்தில் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

💫சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் தளம் இலவசமாகத்தான் இருக்கும் ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

💫உலக ஜூனியர் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு மேலும் இரு பதக்கம்.

💫மாட்ரிட் ஓபன் : நோவக் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

💫Students from 1st to 9th class are required to attend only during the examination and are not required to come to school on other days.  The announcement by the Minister of Education.

 💫Additional Services on the e-Service Center Website: 13 Important Announcements from the Department of Information Technology.

 💫Tamil Nadu General Secretariat to become 'e-office' by June: IT Department Information.

 💫Minister Ma Subramaniam has urged people not to come out unnecessarily from 11 am to 3 pm to protect themselves from the summer sun.

 💫Delhi Indira Gandhi International Airport has been ranked 2nd in the list of airports with the highest number of passengers in the world last March.

 💫Elon Musk, who bought Twitter, said the Twitter site would be free for ordinary users but could be used by commercial users and government agencies for a small fee.

 💫Two more medals for India in World Junior Weightlifting

 💫Madrid Open: Novak Djokovic advances to the next round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment