Pages

Thursday, April 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.04.22

  திருக்குறள் :

பா‌ல் : பொருட் பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம் : சூது, 

குறள் : 936. 

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

பொருள்:அகநிறைவு அடையாமல் துன்பத்தில் நிலைப்பார்கள் சூது என்ற முட்டாள்தனத்தில் முழ்கியவர்கள்.

பழமொழி :

Eagle do not breed doves.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்._____இறையன்பு IAS

பொது அறிவு :

1. இந்தியாவின் கலிபோர்னியா எனப்படும் மாநிலம் எது? 

பஞ்சாப். 

2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்றழைக்கப்படுவது எது? 

தஞ்சாவூர்.

English words & meanings :

sarong - long piece of material folded around the body, உடலைச் சுற்றி அணிந்துகொள்ளும் நீண்ட துணி வகை., 

scanty - too small in size or amount.தேவைக்குப் பற்றாத

ஆரோக்ய வாழ்வு :

சங்கரா மீன் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை உடலில் அதிகரிக்கிறது மற்றும் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய இது தேவைப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக முடக்குவாதம், புற்றுநோய், மற்றும் இதய நோய்களுக்கு, வழிவகுக்கும். டிஎன்ஏ பாதிப்பை தடுக்கிறது, உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

கணினி யுகம் :

Ctrl + + - Zoom In. 

Ctrl + - - Zoom Out.

ஏப்ரல் 29


பாரதிதாசன் அவர்களின் பிறந்நாள்




பாரதிதாசன் (Bharathidasanஏப்ரல் 291891 - ஏப்ரல் 211964பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

நீதிக்கதை

கடமையே வெற்றி தரும்

ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.

தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.

குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.

இன்றைய செய்திகள்

29.04.22

💢பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.3,270 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்.

💢அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.114 கோடி ஒதுக்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

💢கோவை வேளாண் பல்கலை.,யில் இந்தாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்.

💢கரோனா முழுவதும் நீங்காததால் எச்சரிக்கையாக இருங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்.

💢பெல்ஜியம் சாக்லேட் மூலம் பரவும் 'சால்மோனெல்லா நோய்':  லண்டனில் 151 குழந்தைகளுக்கு  நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி .

💢ஜூன் 23-ல் தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி- அட்டவணை வெளியீடு.

💢ஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

💢ஆசிய கோப்பை ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

Today's Headlines

💢In Registrary Department this year's income is Rs. 3,270 crores more information by the TN government.

💢Tamilnadu Health Department allotted 114 crores to build fire-resisting infrastructure in hospitals

💢From this year onwards the Coimbatore Agriculture University will start Tamil Medium Syllabus also.

💢There is no complete eradication of Corona, so be careful and cautious. PM advises the states

💢In Belgium the disease Salmonella is spreading through Chocolate. In London, 151 children got affected and 9 children were admitted to the hospital.

💢TNPL cricket match starts on June 23 - the fixtures are released.

💢Asian Cup Hockey - opening match between India and Pakistan.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment