Pages

Sunday, April 10, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04. 22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: உட்பகை

குறள் : 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

பொருள்:
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பழமொழி :

Doubt is the key of knowledge.


ஐயமே அறிவின் திறவுகோல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அதிக பேச்சு என்னை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவே அதிகம் பேசாத படி பார்த்துக் கொள்வேன். 

2. பொறுமை பெருமை தரும் எனவே எப்போதும் பொறுமையாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

இடைவிடாமல் குருவிடம் (ஆசிரியர்) பக்தி செலுத்துவதன் மூலம் சீடன் (மாணவன்) முக்தியடைகிறான் _____ சாரதா தேவி

பொது அறிவு :

1. எந்த விலங்கின் பால் தயிராக மாற்ற முடியாது? 

ஒட்டகம். 

2. விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு எது? 

நாய் (லைக்கா).

English words & meanings :

Viewpoint  கண்ணோட்டம்

சிந்திக்கும் விதம்

Worse    மிகவுகம் கெட்ட

Tragedy.   சோக சம்பவம்

Stun   வியப்படைய செய்

பிரமிக்க வை

Revile  திட்டுதல்,ஏசுதல்


ஆரோக்ய வாழ்வு :

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லதுஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

கணினி யுகம் :

Ctrl + 5 - Strike through highlighted selection. 

Ctrl + N - Open new document

ஏப்ரல் 11



மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்திजोतीबा गोविंदराव फुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phuleஇந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.

நீதிக்கதை

திருந்திய மகன்

சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்கு சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதை கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.

அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.

அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய செய்திகள்

11.04.22

இந்தியாவில் இருந்து வாழைப்பழம், சோளம் ஏற்றுமதி - கனடா அரசு அனுமதி

✔மாணவர்கள்மற்றும்ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

✔ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 3000 ச. மீ பனகல் பூங்கா இடத்தை பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.

✔ 14-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு.
மையம் . 

இந்திய ஹாக்கி அணி 0-3 என்ற விகிதத்தில் உலக கோப்பை அரை சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Today's Headlines


✔ Export of Bananas and Maize from India - Government of Canada Permission

 ✔Bharathi Dasan University has suspended the raising of examination fees at the request of students and teachers.

 ✔3000 crore for Chennai Metro Rail project.  Chennai Corporation has given permission to use the space of m Pangal Park.

✔ Chance of rain in Tamil Nadu till 14th - Chennai Meteorological Center. 

 ✔Indian hockey team suffered a shock defeat in the World Cup semi-finals at a rate of 0-3
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment