Pages

Friday, March 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.03.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்

பழமொழி :

Spoken words can never be taken back

தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

ஒருவனின் மனம் தூய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவனுக்கு பலன் தராது._____சுகிசிவம்

பொது அறிவு :

1. உலகிலேயே மிகவும் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 

2. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பாலம் கட்டியுள்ள நாடு எது? 

நெதர்லாந்து.

English words & meanings :

Vain    வீண்,உதவாத
Waive. விட்டுகொடு
Xebec.  பாய்மரக்கப்பல்
Yelp.  குரைத்தல்
Zinc துத்தநாகம்

ஆரோக்ய வாழ்வு :

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி ,இருமலை குறைக்கக் கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சக்தியினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலன் காக்கப்படும். சுவாச கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், மூலம், அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.

கணினி யுகம் :

Shift + F10 - Simulate right click on the selected item. 

Shift + Del - Delete programs files permanently.

மார்ச் 26


லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 




லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven/ˈlʊdvɪɡ væn ˈbˌtvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை

வாழ்க்கையில் வரும் வாய்ப்பு

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளைஞனே நீ என் மகளை மணந்து கொள்ள விரும்பினால் நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும். என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக்கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. 

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது. அதைப்பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி, அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச்சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது. அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது. இந்த மாட்டைவிடக்கூடாது இதைத்தான் நான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்த்தும் ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம் அந்த மாட்டுக்கு வாலே இல்லை. நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புக்கள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவறவிட்டால் அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.

இன்றைய செய்திகள்

26.03.22

◆தமிழகத்தில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளையில், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட அகதிகளுக்கு ராமேசுவரம் நீதிமன்றத்தில்பிணை பெறப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

◆ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2,000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை கண்டறிந்துள்ள ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், அங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

◆கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

◆சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி.

◆இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

◆அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்: மீண்டும் வெள்ளையாக மாறிய கிரேட் பேரியர் பவளத்திட்டுகள்.

◆சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி.

◆பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

◆உலக டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி.

◆சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து, காஷ்யப் கால்இறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

◆ It has been reported that the Government of Tamil Nadu is awaiting the decision of the Central Government on how to approach the Sri Lankan Tamils ​​seeking asylum in Tamil Nadu.  Meanwhile, the refugees who were ordered to be imprisoned have been granted bail in the Rameswaram court and are being kept in the Mandapam refugee camp.

 ◆ The Ramanathapuram Archaeological Survey has found traces of two 2,000-year-old Sangam towns at Marungur and Oriyur near Thondi in the Ramanathapuram district and has demanded that excavations be carried out there.

 ◆ The Department of School Education has ordered private schools to ensure that no action is taken against students who do not pay tuition.

 ◆ Supersonic BrahMos missile tested successfully again.

◆ The Central Government has initiated the process of amending the Indian Penal Code and the Criminal Procedure Code.

 ◆ Threatening climate change: Great Barrier Reefs turning white again.

  ◆ One-fourth of Somalia suffers from famine: People suffer from the worst famine in 40 years.

 ◆ Women's World Cup: Australia beat Bangladesh to win the World Cup.

 ◆ World Table Tennis: Silver medalist Sathyan and Manika Bhadra of India.

 ◆ Swiss Open Badminton: PV Sindhu, Kashyap advance to quarterfinals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment