Pages

Wednesday, March 2, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.03.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 820

குறள்:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு

பொருள்:
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிடாமல் விலக்கிக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

Chew your food well and live a long life


 நொறுங்கத் தின்றால் நூறு வயது.


இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு.காரணம் இன்றி விளைவு இல்லை.இவை இரண்டும் இணைந்து செல்கின்றன.இங்கு நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது.___ புத்தர்.

பொது அறிவு :

1.யாருடைய சுயசரிதையான "உங்களில் ஒருவன் " (பாகம் -1) புத்தகம் வெளியிடப்பட்டது?

 மாண்புமிகு முதல்வர். மு.க. ஸ்டாலின். 

2.இளம் கணிதவியலாளர்களுக்கான ராமானுஜன் பரிசு 2021 ம் ஆண்டு யாருக்கு வழங்கப்பட்டது ? 

நீனா குப்தா.

English words & meanings :

Alarmed - frightened, பயப்படுதல், 

Sweltering - very hot, அதிக வெப்பமான

ஆரோக்ய வாழ்வு :

கருப்பட்டி .. கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கு காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது .




கணினி யுகம் :

Ctrl + Alt + Del - Reboot / Windows task manager. 

Alt + Print Screen - Create screenshots for the current program.

மார்ச் 03

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]

இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

நிம்மதி

என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான் ஒரு அரசன், ஞானியிடம். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.? என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான்.

அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்கோ சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ சென்று தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன் என்றார். 

சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா....??? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்...??? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்....??? விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது என்னுடையது இல்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் என்னுடையதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் என்னுடையதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இன்றைய செய்திகள்

03.03.22


◆தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.


◆தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மார்ச் 4, 5-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆கரோனா பாதிப்பு குறைந்ததால் கூட்டம் அதிகரிப்பு: சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் 31.86 லட்சம் பயணிகள் பயணம்.

◆நாடு முழுவதும் 17 துறைகளில் 7 சிறப்பு பிரிவுகளில், தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

◆ஆபரேஷன் கங்கா: 2 விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உட்பட 350 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

◆உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சான் நகரையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

◆மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டியில் தமிழகம் வெற்றி.

◆2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து.
Today's Headlines

 The Minister of School Education has announced the date of the general examination for 10th, 11th, and 12th class students in Tamil Nadu.


 The Met Office has forecast heavy rains in various parts of Tamil Nadu and Pondicherry on March 4 and 5 due to the low-pressure area prevailing in the south-eastern Bay of Bengal.

 Crowd increase due to reduction of corona damage: 31.86 lakh passengers traveled on Chennai Metro trains in February.

  The Federal Government has announced that applications for the National Start-up Awards 2022 in 7 special categories in 17 sectors across the country are welcome.

 Operation Ganga: 350 Indians returned home on 2 flights, including 28 Tamil Nadu students.

 Russia has also reportedly captured the southern Ukrainian city of Gershon.

 Tamil Nadu wins National Level Wheelchair Sword Competition for the Handicapped.

  PV Sindhu wins the Champions of Change Award for 2021.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment