Pages

Thursday, January 6, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.01.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: கூழியல்

அதிகாரம்: பொருள் செயல் வகை

குறள் எண்: 755

குறள்:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

பொருள்:
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.

பழமொழி :

There is no downward journey, for those who keep trying.


முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்,  அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.____கலாம் அவர்கள்


பொது அறிவு :

1. தமிழகத்தில் இரண்டாவது எலும்பு வங்கி எங்கு அமைய உள்ளது? 

மதுரை.

2. காவல்துறையில் அனைத்துப் பதவிகளிலும் திருநங்கைகளுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு அறிவித்த மாநிலம் எது? 

கர்நாடகா.

English words & meanings :

Handle - part of a cooking vessel, door which we can hold, பாத்திரங்கள், கதவில் இருக்கும் கைப்பிடி. 

Handle - manage things, கட்டு படுத்து சமாளி

ஆரோக்ய வாழ்வு :

தூதுவளை உண்பதால் மூச்சு வாங்குதல், காது அடைத்தல், தும்மல், காது மந்தம், சளி அனைத்தும் குணமாகும்.




கணினி யுகம் :

Ctrl + Shift + ^ - Circumflex Accent. 

Alt + shift + delete. - Clear all target segments.

நீதிக்கதை

ராஜா கொடுத்த ஆடை

அரண்மனையை ஒட்டி பிச்சைக்காரன் ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அந்த அரண்மனைக் கதவில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அரச உடை அணிந்து எப்படி விருந்திற்கு செல்வது என்று யோசித்தான். அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணியவனின் மனதில் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே? என்றார் அரசர். ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன் என்று பணிவுடன் கேட்டான்.

மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான். தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான். இந்த உடை நீ இறக்கும் வரை அப்படியே இருக்கும் என்றார். ஆடை கொடுத்த மன்னருக்கு மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்பும் சமயத்தில் மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ஒருவேளை, அரசர் கொடுத்த இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே? என்று யோசித்தான். உடனே விரைந்து சென்று தன் பழைய உடைகளை எடுத்துக் கொண்டான். 

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை. எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வதிலேயே அவனின் எண்ணம் இருந்ததால், அவனால் பரிமாறப்பட்ட பதார்த்தங்களைக்கூட சரிவர ருசிக்க முடியவில்லை. 

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த பிச்சைக்காரனுக்கு பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையைகளையே பார்த்தனர். இவ்வாறே நாட்கள் கழிந்தன. இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். பிச்சைக்காரனின் பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டதை எண்ணி வருந்தினார்.

நீதி :
துன்பத்தையே எண்ணிக் கொண்டு இன்பத்தை இழந்துவிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

07.01.22

◆தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

◆ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஏற்கெனவே திட்டமிட்டவாறு இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

◆கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைக்கு மிக அருகில் பான்காங் ஏரியில் சீனா பாலம் கட்டுவதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் சீனாவின் சட்டவிரோத கட்டுமானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக வெளியுறவுச் செயலர்  தெரிவித்துள்ளார்.

◆இந்தியாவில் அழிந்துபோன பாலூட்டி இனமான சீட்டா வகை சிறுத்தைகளை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

◆ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ்கள் உருவாகக்கூடும் என்று உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது.

◆அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த தென்துருவத்தை அடைந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனை படைத்துள்ளார்  பிரிட்டன் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரியும் கேப்டன் ஹர்ப்ரீத் சந்தி.

◆புரோ கபடி லீக்: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி.

◆2022 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines

🌸 For the first time in the history of Tamil Nadu, the question time of the legislative assembly was telecasted live to the people.

 🌸The Government of Tamil Nadu has announced that those who go for competitive examinations on the day of the curfew will be given permission.

 🌸The Union Public Service Commission (UPSC) has announced that the Civil Service Main Examination will be held from today onwards as planned.

🌸 The Foreign Secretary has strongly condemned China's illegal construction in the wake of reports that China is building a bridge over Lake Pangong, very close to the Indo - Chinese border in eastern Ladakh.

 🌸 The Central Government has initiated efforts to bring back the extinct mammal species of Cheetahs in India.

 🌸 The World Health Organization has warned that the rapid spread of omicron could lead to the emergence of new types of viruses.

 🌸Captain Harpreet Chandi, a British Army officer, has become the first woman of Indian descent to reach the ice-covered South Pole in Antarctica.

 🌸Pro Kabaddi League: Thrillingly Delhi team won the match

 🌸Indian squad for the 2022 Women's World Cup Cricket Series announced.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment