Pages

Tuesday, January 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.01.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடுகுறள் எண் : 740

குறள்:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

பொருள்:
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

பழமொழி :

Beauty is a short-lived reign.


அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்____கலாம் அவர்கள்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 திருவனந்தபுரம். 

2. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடு எது? 

சீனா.

English words & meanings :

Accept - receiving something. ஏற்றுக்கொள்வது. 

Except - not including something or some body. ஒருவர் அல்லது ஒரு பொருள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது.

ஆரோக்ய வாழ்வு :

தேனின் நன்மைகள்,



1) எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 

2) ஆரஞ்சு பழச் சுளைகளை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்

கணினி யுகம் :

Alt + Shift + N - Add Note. 

Ctrl + Alt + T - Add term


நீதிக்கதை

 தீயவர்களின் நட்பு

ஒரு கிணற்றில் வயதானத் தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயதான தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப்புற்று அதன் கண்ணில்ப்பட்டது.

நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன? என்கிற எண்ணம் வந்தது. மெதுவாகப் பாம்புப்புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது. உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?என்று கேட்டது அந்த பாம்பு.

அதற்கு அந்த வயதானத் தவளை, என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றது. 

என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்? நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றது தவளை. பாம்பும் யோசித்தது. நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்படி தானாக வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

கிணற்றுக்குள் சென்ற பாம்பும், அந்த வயதானத் தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் அழித்தது. கிணற்றுக்குள் இருந்த வயதான தவளையும் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு வயதான தவளையைப் பார்த்து, உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டதால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டது. வயதானத் தவளையோ, நண்பரே! நீங்கள் எனக்கு உதவிதற்கு மிக்க நன்றி. எனக்கு இனிமேல் உங்களின் உதவி தேவையில்லை என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன் என்று அச்சுறுத்தியது.

வயதானத் தவளையும் பயந்து, தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அந்த வயதான தவளையின் மகனையும் சாப்பிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற வயதானத் தவளையின் மனைவி, நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாம் இருவர் மட்டும்தான் மீதம் இருக்கிறோம். நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாம் இருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம் என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் ஏதாவது கொடு என்று கேட்டது. உடனே வயதானத் தவளை, நண்பரே! நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன் என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நிமிடங்கள் கழிந்த பின்பு, நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நான் வேகமாகச் சென்று தவளைகளை அழைத்து வருகிறேன் என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது. தன் பசிக்கு உணவு கொண்டு வரச்சென்ற வயதானத் தவளையும், அதனுடைய மனைவியும் திரும்ப வரவேயில்லை. பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, பல்லியாரே, அந்தக் வயதானத் தவளைக்கு நீங்களும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச்சொல் என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்த வயதானத் தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது. அதற்கு அந்த வயதானத் தவளை பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன் என்று சொல்லி அனுப்பியது.

நீதி :
நட்பு நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.22

◆தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

◆பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடம் கரும்பு நேரடி கொள்முதல்: அரசின் வழிமுறைகள் வெளியீடு.

◆லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைக் கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

◆நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது.

◆பிரான்ஸில் புதியவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: 46 உருமாற்றங்களுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.

◆புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி.

◆தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் அபாரம்.

Today's Headlines

 🌸 The Director of State Examinations has announced that students who have learning subjects through the Tamil language will be exempted from the Plus 2 examination fee.                                  

     🌸Direct purchase of sugarcane from farmers for Pongal gift package:  Government guidelines regarding this is published.

 🌸 The construction of a new bridge by the Chinese army in the Pangong Lake area of ​​Ladakh has been confirmed by satellite photography.

🌸 Nationwide cyber crimes against children increased by 261 percent in 2020.

 🌸 A new type of coronavirus discovered in France: Scientists report that there are 46 mutations.

 🌸 Pro Kabaddi League: Bengal Warriors and Patna teams won.

 🌸 Test against South Africa: Shardul Thakur from the Indian team outshines the play by taking 5 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment