Pages

Wednesday, December 22, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.12.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 732

குறள்:
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

பொருள்:
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

பழமொழி :

Beware of him that telleth tales.

 புறங்கூறி திரிபவனிடம் எச்சரிக்கையாக இரு .

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்தியாவில் முதல் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 

1806. 

2.சாலை போக்குவரத்து சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 

1989.

English words & meanings :

Acid Test - கடுஞ்சோதனை, 

Acrophobia - அதிக உயரம் குறித்த பயம் 

ஆரோக்ய வாழ்வு :

பாகற்காய் சுவாச கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கும்.கல்லீரலை வலுப்படுத்தும்.நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பருக்கள் வருவதை தடுக்கும்.




கணினி யுகம் :

MS excel short keys: 

Ctrl + Shift + 0 - Unhide the columns.

 Ctrl + 0 - Hide the selected columns


நீதிக்கதை


மூன்று புதிர்!

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான். 

பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.

வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு. 

பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார். 

நீதி :
அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.

இன்றைய செய்திகள்

23.12.21


◆தமிழகத்தில் முதல் முறையாக, உதகை மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான மண் உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம்.


◆பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

◆தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

◆முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

◆நடுவானில் பாதையை மாற்றிச் சென்று தாக்கும்திறன் கொண்ட ‘பிரலே‘ ஏவுகணை: ஒடிசா மாநிலத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தில் இருந்து  வெற்றிகரமாக சோதனை.

◆டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

◆மியான்மரின் கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

◆2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா.

◆விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: அரைஇறுதிக்கு தகுதி பெற்றது சவுராஷ்டிரா.
Today's Headlines

🌸 The Launching of Green Technology System for Soil Stabilization Project is started in Udagai Hill ways at Tamil Nadu for the first time in  to prevent landslides and soilslides 


 🌸 The Department of School Education has ordered that advisory committees should be set up to ensure the safety of students in schools.

🌸 Intermediate teacher trainees and B.Ed graduates are eagerly awaiting the announcement of the new examination as no teacher eligibility test has been conducted in Tamil Nadu for the last 2 years.

 🌸The annual family income of the beneficiary of the Chief Minister's Comprehensive Medicare Scheme has been increased from Rs. 72,000 to Rs. 1.20 lakhs.

 🌸 Intermittent intercontinental ballistic missile is tested successfully from Dr. ABJ Abdul Kalam missile centre in Orissa .

🌸 The number of corona infections in Delhi has also increased to a level not seen in the last 6 months as the number of the number of Corona infections also has started to increase.

 🌸100 people missing after landslide at a greenstones mine in Myanmar's Kutch province.  One person has been reported dead so far.

 🌸More than 33 million people worldwide were killed by  corona virus in 2021 alone, and Tetras Adanam, president of the World Health Organization, announced that we have to bring an end to corona by 2022.


 🌸Asian Champions Trophy Hockey: India won bronze.

 🌸 Vijay Hazare Cup Cricket: Saurashtra qualifies for semi-finals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment