Pages

Monday, December 20, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.12.21

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 728

குறள்:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். பொருள்: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்


பழமொழி :

Don't judge the worth of a person by their size.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

வழி இருப்பது உண்மை தேடுவது நம் திறமை

பொது அறிவு :

1. இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? 

ஆந்திரப்பிரதேசம். 

2. புளூட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு எது? 

2006.

English words & meanings :

A path of democracy - ஜனநாயக பாதை, 

Absolute monarchy - முழு அதிகாரமுடைய முடியாட்சி

ஆரோக்ய வாழ்வு :

அவரைக்காயில் புரதம் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது .மலச்சிக்கலைப் போக்குகிறது.

கணினி யுகம் :

Switch the video to full-screen or theater mode

*Pressing the F key switches between full-screen and normal mode.

Tip

Pressing Esc also exits the full-screen mode.

*Pressing the T key switches between theater mode and normal mode.

டிசம்பர் 21


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்





எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 211972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நீதிக்கதை

நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

22.12.21

🔴 பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. 

🔴 தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் விஞ்சிய கோவை!

🔴 தொண்டை மண்டலத்தை இயற்கை வேளாண் மண்டலமாக்குவதுதான் இலக்கு!' - THOFA நடத்தும் வேளாண் திருவிழா

🔴 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி முனீஸ்வரி பயின்று வருகிறார். இவர் சோழர் காலத்து ஈழக்காசுகளை கண்டெடுத்தார் ; இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

🔴 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

🔴 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா


Today's Headlines

🔴  For the festival of Pongal total 16,768 special buses are planned to operate

🔴  In the daily status of Corona Covai upbeat Chennai

🔴  Our goal is to turn Thondai Zone into Natural Agriculture Zone - THOFA conducts Agri Festival

🔴  In Ramnad District at Thirupullani school a plus two student found out Srilangan coins which belong to the period of Chozha. She receives heaps of congratulations.

🔴  Famous Tennis Player Rafael Natal is having Corona positive.

🔴  In Asian Championship Cup India defeated Japan and confirm its 3rd victory

 Prepared by

Covai women ICT_போதிமரம்

1 comment: