Pages

Tuesday, December 14, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.12.21

  திருக்குறள் :


பால்: பொருட்பால்.

இயல்:அமைச்சியல்.

அதிகாரம்: அவை அஞ்சாமை. 

எண் : 722

 குறள்:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார. 

 பொருள்:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.

பழமொழி :


You waited this much, wait just a bit more.

ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லை


இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.

2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தான கோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட  முடியாது.____விவேகானந்தர்
பொது அறிவு :

1. மனிதர்களால் வளர்க்கப்பட்ட முதல் பறவை எது? 

வாத்து. 

2. இந்தியாவில் செம்பு அதிகமாக கிடைக்கும் பகுதி எது? 

ராஜஸ்தான்.

English words & meanings :


Draw the line - to set a limit, சில காரியங்களுக்கு எல்லைக் கோடு அமைத்தல், 

carry the can - taking the blame for the things which we didn't do, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தல்

ஆரோக்ய வாழ்வு :


வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.



கணினி யுகம் :


PRINT SCREEN - Copies an image of the screen to the Windows Clipboard. 


 ALT+PRINT SCREEN - Copies an image of the active window to the Windows Clipboard.


டிசம்பர் 15


வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்




வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 151966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

நீதிக்கதை


உண்மைக்குக் கிடைத்தப் பரிசு

ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 

அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 

அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 

ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 

ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 

பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 

நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.

இன்றைய செய்திகள்

15.12.21


◆தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◆நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளுடன் ஜனவரி 6-ம் தேதி 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார்.

◆மதிப்பெண் பட்டியல் வெளியாகி 11 மாதங்கள் ஆகியும் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி.

◆நெதர்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக் கழகத்திலுள்ள சோழ மன்னர்களின் பழங்கால சாசனங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

◆பழைய கூகுள் குரோமில் பாதுகாப்பு ரீதியாக ஆபத்து: மத்திய அரசு எச்சரிக்கை.

◆இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

◆டென்னிஸ் ஏடிபி தரவரிசை: முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் இளம் வீரர்கள்.

◆உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி.

◆தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகள் அசத்தல்.

Today's Headlines

🔹Chennai High Court has directed the police to prevent misuse of national and state government symbols.

 🔹45th Chennai Book Fair on January 6 with 800 halls at Nandanam YMCA Grounds: Chief Minister Stalin launches and presents awards.

  🔹Even after the 11 months of the publication of the mark sheet there is Delay in publishing the Block Education Officer Selection List: Selectors dissatisfied with the Teacher Recruitment Board.

 🔹The Union Minister of Tourism and Culture has said that the Central Government has taken steps to restore the ancient charters of the Chola kings at Leiden University in the Netherlands.

🔹 Security Danger in Old Google Chrome:  Warning by Central Government 

🔹 A tsunami alert was issued today following a powerful earthquake near the southern Indonesian island of Maumera.

🔹 Tennis ATP Rankings: Young players dominating the top 10 places.

 🔹 World Badminton Tournament: Indian players Srikanth, Pranoy win.

🔹Southern Regional Basketball Tournament: Tamil Nadu teams are amazing.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment