Pages

Sunday, December 12, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.12.21

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: துறவறவியல் 

அதிகாரம்: நிலையாமை 

குறள் எண்: 333 

குறள்:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல். 

பொருள்: செல்வம் நிலையில்லாதது. ஆகவே,செல்வம் உள்ளபோதே நிலையான அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்.

பழமொழி :

As is the father, so is the son


தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.

2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

சோதனைகளை சாதனையாக்க
முயல்பவனுக்கே வேதனைகளும்
போதனைகளாக அமையும்.
சோதனைகளை கண்டு
பயந்து துவண்டு விடாமல்
அடுத்த அடியை
எடுத்து வையுங்கள்.____ அன்னை தெரேசா


பொது அறிவு :

1. பென்குயின்கள் வாழாத துருவப்பகுதி எது? 

வட துருவம். 

2 . உலக பென்குயின் தினம் எப்போது? 

ஏப்ரல் 25.

English words & meanings :

Adorable - very cute, அழகிய, 

in a nutshell - describing things in very few words, நிகழ்வுகளை ஒரு சில வார்த்தைகளில் கூறுபவர்

ஆரோக்ய வாழ்வு


கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் கட்டி
வளர்ச்சிகளை தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம்,
வாய் குழி மற்றும் நுரையீரல் புற்று நோய்களில் இருந்து
பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.


கணினி யுகம் :

Alt+0174 - ®

 Alt+0128 - €  (Euro currency)

டிசம்பர் 13

நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்




நா.பார்த்தசாரதி (டிசம்பர் 181932 - டிசம்பர் 131987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]


நீதிக்கதை


சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்

போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். 

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது. 

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்?

நானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான். உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான். 

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை. 

நீதி :
தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

13.12.21


◆விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்: நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கு சீல்.

◆தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு: தேர்வெழுத முடியாமல் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு.

◆ஒமைக்ரான் வைரஸை 2 மணிநேரத்தில் கண்டறியும் புதிய பரிசோதனை  கருவி: ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் வடிவமைப்பு.

◆விண்வெளி சுற்றுலாவின் 3-வது குழு பயணத்தை நிறைவு செய்தது ஜெப் பெசோஸ் நிறுவனம்.

◆ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு.

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி.

◆ஆசிய துடுப்புப்படகு போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது.

◆பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.

Today's Headlines

 🌸 The work to collect parts of the crashed helicopter is speed up: The area of Nanjappa Chaththiram is Sealed. 

🌸 Chennai: The Chennai Meteorological Department has forecast moderate rains for five days in Tamil Nadu.

 🌸Polytechnic Lecturer Selection;  Examination Centers are allocated in far away places.  Applicants are not able to appear for the examination.

🌸 New testing tool to detect omegran virus in 2 hours: Designed by ICMR researchers.

 🌸 Jep Bezos completes 3rd group voyage of space travel.

 🌸Earthquake in Japan:Register as 5 on the Richter scale.

 🌸Big Bash 20 Over Cricket: Melbourne Stars won

 🌸India won two gold and four silver medals at the Asian paddle boat Championships.

 🌸Premier League football: Manchester United won .

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment