Pages

Wednesday, December 1, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.12.21

 திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்;; குடியியல்

அதிகாரம்; பெருமை

குறள் எண்; 980
குறள்: அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள்: பிறர் குற்றங்களைப் பெரிது படுத்தாது மறைப்பது
பெருமைப் பண்பு ஆகும். பிறர் குற்றங்களையே கூறி வாழ்வது
சிறுமைத்தனம் ஆகும்.

பழமொழி :

Better one word in time than two afterward.


வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் மேற்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா.


பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீவு எது? 

கீரின்லாந்து. 

2.ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்? 

33 ஆண்டுகள்.

English words & meanings :

become bright on account of a light being shone or switched on, ஒளி ஏற்று. 

Light up - illuminated, ஒளிருதல்

ஆரோக்ய வாழ்வு :




நீர் சத்து நிறைந்த புடலங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும். குறைந்த கலோரி கொண்டது எனவே உடல் எடையை குறைக்க உதவும். வாயுத் தொல்லை குறைக்கும். சரும பிரச்சினை போக்கும்.

கணினி யுகம் :

Ctrl+Delete - It will delete the word to the right of the cursor. 

Alt+N, P - It enables you to insert a picture in your file. You need to press Alt and N keys together then press P.

நீதிக்கதை

குரங்கை நம்பிய தோட்டக்காரன் 

கதை :
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 

அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 

நீதி :
அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

இன்றைய செய்திகள்

02.12.21

★குமரியில் இருந்து கேரளாவிற்கு 20 மாதங்களுக்கு பின்பு அரசு பேரூந்துகள் இயங்கியது: பயணிகள் மகிழ்ச்சி.

★தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.


★இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்.

★உலகை அச்சுறுத்தும் புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியலாம்: பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு.

★ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் தாக்கத்தை விஞ்சுவதற்கான வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

★ஆண்டு இறுதியில் அரங்கேறும் கவுரவமிக்க உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி.

★இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா.


Today's Headlines

🌸 Government buses run from Kumari to Kerala after 20 months: Passengers are happy.

 🌸 Tamil Nadu is self-sufficient in oxygen production, said the Minister of Medicine and Public Welfare.


 🌸 Doordarshan landline shutdown across India:  14 thousand employees' jobs are at risk.

 🌸 The world-threatening new omicron coronavirus can be detected in RTPCR test: Federal Department of Health directs states to increase the testing.

 🌸 South African researchers report that the omicron virus is likely to outperform the delta virus.

 🌸 Kitambi Srikanth of India wins the prestigious World Tour Finals Badminton Tournament at the end of the year.

  🌸Indian Super League Football: Odisha beat East Bengal.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment